STR49 movie: சிம்பு படத்தில் ஜோடி சேரும் அமரன் பட நாயகி.. அட மீண்டும் காமெடியனா சந்தானம் ஜாயினிங்கா?

சென்னை: நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, வையாபுரி, அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். கமல்ஹாசன் -மணிரத்னம் காம்பினேஷனில் 34 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது தக் லைஃப் படம்.

படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல சிம்பு -திரிஷா காம்பினேஷன் மீண்டும் இந்தப் படத்தில் மேஜிக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சிம்பு நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகாத நிலையில் இந்த ஆண்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறர் சிம்பு.

simbu sai pallavi santhanam str 49

நடிகர் சிம்பு: நடிகர் சிம்புவின் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் வெற்றிகள் வெளியான நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அவர் படங்கள் எதுவும் ரிலீசாகாதது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. ஆனால் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். சிம்பு -தேசிங்கு பெரியசாமி காம்பினேஷன் படம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் முடங்கியுள்ளது. இந்தப் படத்திற்காக காத்திருந்த சிம்பு தற்போது அடுத்தடுத்த படங்களை அறிவித்துள்ளார்.

சிம்பு பட அறிவிப்புகள்: கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் எஸ்டிஆர் 49 மற்றும் எஸ்டிஆர் 51 படங்களின் அறிவிப்பு வெளியானது. இதில் எஸ்டிஆர் 51 படம் அவரது தயாரிப்பிலேயே உருவாகவுள்ளது. இதில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் என தரமான படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்றிருந்த ராம்குமார் இயக்கவுள்ளார். படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்பு பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. இதில் சிம்புவின் கைகளில் புத்தகத்தில் ரத்தக்கறையுடன் மறைக்கப்பட்ட கத்தி இருப்பதாக காணப்பட்டது.

எஸ்டிஆர் 49 படம்: இந்த போஸ்டர் மூலம் படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆக்ஷன் கலந்த கல்லூரி கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தெரிகிறது. படம் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டிலேயே சிம்புவின் அடுத்தடுத்த இரு படங்கள் ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக இணையவுள்ளதாக தற்போது தகவ்லகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் நடிகர் சந்தானமும் காமெடியனாக மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்புவுடன் இணையும் சந்தானம்: சிம்புவுடன்தான் சினிமாவில் மன்மதன் படம் மூலம் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் நடிகர் சந்தானம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு ஹீரோயிசம் சிறப்பாக கைகொடுக்காத நிலையில் காமெடி ஹீரோவாக நடித்து வருகிறார். இதனிடையே, அவர் காமெடி அதகளம் செய்திருந்த மதகஜராஜா படம் கடந்த பொங்கலையொட்டி ரிலீசாகி அவரது சிறப்பை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் காமெடி அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X