Sai Pallavi: நாக சைத்தன்யாவுடன் இணைந்த சாய் பல்லவி.. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சாய் பல்லவி, தற்போது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் கமிட்டாகிவரும் சாய் பல்லவியின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Actress Sai Pallavi joins with Naga chaithanyas NC23 movie

நாக சைத்தன்யாவிற்கு மீண்டும் ஜோடியான சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இவர் அறிமுகம் ஆனது பிரேமம் என்ற மலையாளப் படத்தில்தான் என்றபோதிலும் முதல் படத்திலேயே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை தன்னுடைய அழகு மற்றும் நடிப்பால் கட்டிப் போட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

தமிழில் தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது சிவகார்த்திகேயனுடன் இவர் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இதன் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை ஷெட்யூலில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி காம்பினேஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துவரும் இந்தப் படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக நாக சைத்தன்யாவுடன் அவரது NC23 படத்தில் இணைந்துள்ளார் சாய் பல்லவி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளியான நிலையில், இன்னும் சூட்டிங் துவங்கப்படாத இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. அவரது இந்த ட்வீட்டிற்கு நடிகர் நாக சைத்தன்யாவும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிலளித்துள்ளார்.

Actress Sai Pallavi joins with Naga chaithanyas NC23 movie

முன்னதாக இந்த ஜோடி லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்து மொண்டேடி இந்தப் படத்தை இயக்கவுள்ள நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ள இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் பன்னி வாசு தயாரிக்கவுள்ளார். யதார்த்தமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் சாய் பல்லவி இந்தப் படத்திலும் அதேபோன்ற ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம். பெரிய அளவிலான தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட உள்ள NC23 படத்தின் சூட்டிங் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X