Sai Pallavi: சந்திரமுகி 2 படத்தை தவறவிட்ட சாய் பல்லவி.. அந்த ரோல்லதான் கங்கனா நடிச்சிருக்காங்களா?
சென்னை: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தில் மலர் என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சாய் பல்லவி.

சந்திரமுகி 2 படத்தில் லீட் கேரக்டரை மிஸ் செய்த சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார். பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ஒரு மருத்துவர் என்பது தெரிந்த விஷயம்தான். நடனத்திலும் சிறப்பாக காணப்படும் இவர் தொடர்ந்து, அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது கார்கி படம், பெண்களை மையப்படுத்தி வெளியானது. படம் சாய் பல்லவிக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
தற்போது சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இந்த சூட்டிங்கில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் காம்பினேஷன் காட்சிகள் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் சாய் பல்லவி, சமீபத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சாய் பல்லவி முன்னதாக தவறவிட்டது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது கங்கணா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி ரோலில்தான் சாய் பல்லவி நடிக்கவிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்காக இயக்குநர் பி வாசு சாய் பல்லவியை அணுகியபோது, கதையை கேட்டு உடனடியாக ஓகே சொல்லியுள்ளார் சாய் பல்லவி.

ஆனாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பி வாசுவிடம் இவர் கேட்டுள்ளாராம். இதனால் கடுப்பான பி வாசு, கதையில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால்தான் இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க முடியாமல் போயுள்ளது. இதையடுத்து இந்த ரோலில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரும் நடிக்காத நிலையில் தற்போது பாலிவுட்டின் சர்ச்சை நாயகி கங்கணா ரனாவத் அந்த ரோலில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக அனைவரையும் கவர்ந்துவரும் சாய் பல்லவி, ஜோதிகா கேரியரில் சிறப்பாக அமைந்த சந்திரமுகி போன்ற கேரக்டரை சில காரணங்களுக்காக தவறவிட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக நடனம் ஆடும் திறமையுள்ள சாய் பல்லவிக்கு சந்திரமுகி ரோல் கண்டிப்பாக சிறப்பாக பொருந்தியிருக்கும். அந்த வகையில் அவர் மட்டுமில்லாமல், அவரை அந்த ரோலில் பார்க்க ரசிகர்களும் தவறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











