பிறந்த நாளுக்கு ஆண்டவரின் பரிசு.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன சாய்பல்லவி !

சென்னை : கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51வது தயாரிப்பு திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாகும். இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான டாக்டர் திரைப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என் இரு மொழிகளில் உருவாகும் SK20 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்

SK21

SK21

இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் SK21 என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை ரங்கூன் படப்புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

இதன்படி கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாய்பல்லவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரு சர்ப்ரைஸாக கருதப்படுகிறது. கமல்ஹாசனை சாய்பல்லவி சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கதை இதுதானா?

கதை இதுதானா?

சிவகார்த்திகேயனின் 21வது படமான இப்படம் மிகப்பிரம்மாண்டமாக தேசப்பற்று சம்மந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. SK21 படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X