திருச்சிக்கு தேர்வு எழுத வந்த 'மலர் டீச்சர்'.. செல்பி எடுத்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் ரசிகர்கள் திணற திணற செல்பி எடுத்து தீர்த்துள்ளனர்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தவர் சாய் பல்லவி. பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சராக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ரப்பர் போல்

ரப்பர் போல்

மாரி 2 படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு சாய் பல்லவி போட்ட ஆட்டம் பெரும் வைரலானது. உடம்பை ரப்பர் போல் வளைத்து சர்வ சாதாரணமாக ஆடி பட்டையை கிளப்பினார்.

கடைசியாக என்ஜிகே

கடைசியாக என்ஜிகே

தனுஷ் ஆடிய போதும் அனைவரின் கண்களும் இன்றும் சாய் பல்லவியை மட்டும் தான் பார்த்தது என்பதை மறுக்க முடியாது. தமிழில் கடைசியாக என்ஜிகே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விராட்ட பர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருச்சியில் தேர்வு

திருச்சியில் தேர்வு

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முகத்தில் மாஸ்க்குடன் இருக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை சாய் பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் தேர்வு எழுத சென்றதாக கூறப்படுகிறது.

வைரலாகும் செல்பி

வைரலாகும் செல்பி

அப்போது சக தேர்வர்கள் அவருடன் ஆசைத் தீர செல்பி எடுத்துள்ளனர். மாஸ்க்கை இறக்கிவிட்டு தன்னுடன் செல்பி எடுத்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி. அந்த செல்பிக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்பு

சாய் பல்லவி 2016ஆம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்தார். ஆனால் அவர் பிராக்டிஷனராக ரிஜிஸ்டர் செய்யவில்லை என தெரிகிறது. இதற்கான தேர்வை எழுத சென்ற போதுதான், சக தேர்வர்கள் அவருடன் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X