நல்லா எடுப்பா இருக்காரே.. அக்கா மாதிரியே.. ஹீரோயினாகிறார் சாய் பல்லவி சிஸ்டர்!

சென்னை : சாய் பல்லவின் தங்கை பூஜா ஸ்டண்ட் சில்வா இயக்க உள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

பூஜா ஏற்கனகே ஏ.எல்.விஜயிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் கதாநாயகியாக நடிக்க உள்ள படத்திற்கும் கதை, வசனத்தை விஜய்யே எழுத உள்ளாராம்.

Actress Sai Pallavi sister, Pooja turns Heroine

சாய் பல்லவியை பலருக்கும் மலர் டீச்சராத்தான் தெரியும் அந்த அளவுக்கு பிரேமம் படத்தில் இயல்பாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கிலும் தனது கால் தடத்தை பதித்து ஹிட்டடித்து வருகிறார்.

மாரி 2 படத்தில் இவர் போட்ட ஆட்டம் அமர்க்களமாக இருக்கும். ஏ ரவுடி பேபி என, அனைவரையும் கொஞ்சும் அளவுக்கு, தரமான குத்தாட்டத்தை போட்டு அனைவரையும் நடனமாட வைத்தார். இன்று வரை இந்த பாடல் டிரெண்டிங்காகத்தான் உள்ளது.

Actress Sai Pallavis sister, Pooja turns Heroine

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சாய் பல்லவி, சமந்தாவின் கணவர் நாக சைத்தான்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாக உள்ளது. இப்படத்தில் யார் சிறந்த நடிகர் என்பதை நிருபிக்க நாக சைத்தான்யாவும், சாய் பல்லவியும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

Recommended Video

Sasikala production House launch | Sai Dhansika, Bhakiyaraj

இந்நிலையில் சாய்பல்லவியின் தங்கையான பூஜா ஸ்டண்ட் சில்வா இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஏற்கனவே ஏ.எல்.விஜயிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இதனால், இப்படத்திற்கு கதை, வசனத்தை ஏ.எல்.விஜய்யே எழுத உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: sai pallavi pooja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X