அய்யய்யோ திருமணமா!.. எனக்கு விருதுகளை விட.. பிரமேம் டீச்சர் என்ன சொல்றாங்க பாருங்க
சென்னை: விருதுகளை வாங்கி குவிப்பதை விட ரசிகர்களின் பேரன்பு தான் முக்கியம்.நான் நடித்த கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை அவர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள். இந்த உண்மையான அன்புக்கு எது கொடுத்தாலும் ஈடு ஆகாது என டீச்சர் நடிகை தெரிவித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படி ஒரு பதிலை அளித்த நடிகையை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. பிரேமம் படத்தில் நடித்த டீச்சர் கதாப்பாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக அழகிற்காக அவரது கனத்தில் பருவை கூட நீக்காமல் நடித்திருந்தது மிகவும் பிடிக்க காரணமாக இருந்தது. நடிகை என்றால் முகப்பொழிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்பதை உடைத்தெறிந்தவர் சாய் பல்லவி. தமிழில் மாரி, கார்கி, அமரன் போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து கமல்ஹாசன் வியந்து பாராட்டியிருந்தார். அதேபோன்று திரை ரசிகர்களும் ஆஹா ஒஹோ என்றும் பேசி அன்பை பொழிந்தனர். இந்நிலையில், சாய் பல்லவி அளித்திருக்கும் பேட்டியை பார்த்த அவரது ரசிகர்கள் பாசமழையை பொழிந்து வருகிறார்கள்.

அன்பு தான் எல்லாமே: அமரன் படத்திற்கு பிறகு தெலுங்கில் தண்டேல் படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடன அசைவுகள் ரீல்ஸ் வீடியோக்களாக வெளியாகி வைரலானது. பலரும் சாய் பல்லவி போன்ற நடன அசைவுகளை ஆட முயற்சித்தனர். தற்போது ராமாயணா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாய் பல்லவி அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், தொகுப்பாளர் ஒருவர் நீங்கள் நடிக்கும் படத்திற்கு விருதுகள் கிடைக்கவில்லை என்று வருந்தியது உண்டா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி, எனக்கு விருதுகளை விடை ரசிகர்களின் அன்புதான் முககியம் அவர்கள் தான் எனக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள்.
நான் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் எமோஷனலை புரிந்துகொண்டு அந்த உணர்வோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனக்கு கிடைக்கும் உண்மையான வெற்றியாக பார்க்கிறேன். ரசிகர்கள் நான் நடிக்கும் கதாப்பாத்திரங்களை விரும்புகிறார்கள். அந்த உணர்வோடு கலந்து என்னையும் நேசிக்க தாெடங்குகிறார்கள். விருது முக்கியமானது தான் அதை புறக்கணிக்க வில்லை. ஆனால், ரசிகர்கள் வைக்கும் அன்பு விருதை விடை மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்கள் கண்களில் ஆழமான நேசத்தை பார்க்க முடிகிறது என சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.
திருமணம்: மேலும் திருமணம் குறித்து பேசிய சாய் பல்லவி, இப்போது நான் அளிக்கும் 2 மணி நேர பேட்டிக்கு திருமணம் குறித்து தெளிவாக பேச முடியும். ஆனால், அது திருமண வாழ்க்கைக்கு செட் ஆகாது. திருமணத்தில் காதலை விட பிரிவுகள் அதிகமாக இருக்கிறது. ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து செல்வது போன்ற நம்பிக்கைகள் இருக்கின்றன. இது எனக்கு எந்தவித பாதிப்பை தரும் என்ற பயம் இருக்கிறது. பார்ப்போம் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











