Sai Pallavi: சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து உற்சாக போஸ்.. புகைப்படம் வெளியிட்ட சாய் பல்லவி!

சென்னை: நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் காஷ்மீரில் கடுமையான குளிர், பனிக்கிடையில் படமாக்கப்பட்டன.

தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதில் நடிகை சாய் பல்லவி பங்கேற்றுள்ளார்.

Actress Sai Pallavis new photo in SK21 shooting spot at Pondicherry impresses fans a lot

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் காஷ்மீரில் நடத்தப்பட்டது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வரும்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடுமையான குளிர், பனி உள்ளிட்டவற்றிற்கு இடையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

எஸ்கே21 படத்தில் சாய் பல்லவி: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் சாய் பல்லவி. படத்தில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி காம்பினேஷன் காட்சிகள் தற்போது பாண்டிச்சேரியில் நடத்தப்பட்டு வருகின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாண்டிச்சேரியில் எஸ்கே21 பட சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுவரும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் சாய் பல்லவி எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சாய் பல்லவி. தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சாய் பல்லவி நடித்து வருவதால் இந்தப் படத்திலும் அவருடைய கேரக்டர் கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் சாய் பல்லவி. அவருக்கு எஸ்கே21 படம் சரியான ரீ என்ட்ரியாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சாய் பல்லவி, எஸ்கே 21 படத்தை தொடர்ந்து அடுத்ததாக நாக சைத்தன்யாவுடன் தெலுங்குப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். முன்னதாக இந்த கூட்டணி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

Actress Sai Pallavis new photo in SK21 shooting spot at Pondicherry impresses fans a lot

அழுத்தமான கதைக்களங்கள்: பிரேமம் படம் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த சாய் பல்லவி தொர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்துவரும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி படமும் சாய் பல்லவி நடிப்பிற்கு சான்றாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X