மெரூன் பார்டர்.. வெள்ளை பட்டு.. கொண்டை.. கூலிங்கிளாஸ்.. வேற லெவலில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் சாக்ஷியா இது என பெருமூச்சு விட்டுள்ளனர்.

நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, விஸ்வாசம், காலா உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பல விமர்சனங்களுக்கு ஆளானார் சாக்ஷி அகர்வால்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். டெடி, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

தீவிர வொர்க் அவுட்

தீவிர வொர்க் அவுட்

அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தனது போட்டோ ஷுட்டுக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து கிக்கேற்றி வருகிறார். லாக்டவுன் நேரத்தில் வீட்டில் உள்ள சாக்ஷி அகர்வால் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அசத்தல் போட்டோ ஷுட்

அசத்தல் போட்டோ ஷுட்

அதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தான் வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். மாடர்ன் டிரெஸ் டிரெடிஷ்னல் என தனக்கு சூட்டாகும் அனைத்து விதமான உடைகளிலும் அசத்தலாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

ஒரு மில்லியன்..

ஒரு மில்லியன்..

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் கலக்கல் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

கொண்டை கூலிங் கிளாஸ்

கொண்டை கூலிங் கிளாஸ்

அதில் மெரூன் நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற பட்டு சேலையை அணிந்துள்ளார். அந்த வீடியோவில் தலையில் கொண்டை கண்களில் கூலிங் கிளாஸ் என பேக்ரவுண்டில் மாரி பட பாடல் ஒலிக்க கெத்தாக நடந்து வருகிறார்.

மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி

இதனை பார்த்த நெட்டிசன்கள் சாக்ஷி அகர்வாலா இது என வாயை பிளந்துள்ளனர். சில நெட்டிசன்கள் அடுத்த ஜெயலலிதா நீங்கள் தான் என புகழ்ந்துள்ளனர். சில நெட்டிசன்கள் மதுரை மீனாட்சி போலவே இருக்கீங்களே என வர்ணித்துள்ளனர்.

ஷெரின் லைக்ஸ்

அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு கையை காட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், மேக்கப் அதிகமோ என கலாய்த்துள்ளனர். இருப்பினும் சாக்ஷியின் இந்த வீடியோவை ஷெரின் உட்பட பலரும் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X