twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சாக்ஷி அகர்வால் !

    |

    சென்னை : பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    நோய்க் கிருமியிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    3 லட்சம் பாதிப்பு

    3 லட்சம் பாதிப்பு

    கொரோனா இரண்டாவது அலை ஜெட் வேகத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வருகிறது. இதனால் பலரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்து கொண்டு இருக்கிறார்கள

    தடுப்பூசி

    தடுப்பூசி

    நாடு முழுவதும் 18 முதல் 44 வயதினருக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

    தடுப்பூசி தட்டுப்பாடு

    தடுப்பூசி தட்டுப்பாடு

    கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நேரத்தில் பலரும் தடுப்பூசிபபோட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். ஆனால் போதுமான தடுப்பூசி இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.

    தடுப்பூசி போட்டுக்கொண்டார்

    இந்நிலையில், பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Actress Sakshi Agarwal Gets covid Vaccine
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X