என்னை குறைத்து மதிப்பிடுவது வேடிக்கையானது.. உருக்கட்டுடையுடன் கொல வெறியில் ரஜினி பட நடிகை!

சென்னை: கையில் உருட்டுக்கட்டையுடன் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் நடிகை தன்னை குறைத்து மதிப்பிடுவது வேடிக்கையானது மிரட்டியுள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.

ஆனால் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார்.

யானை மீது..

யானை மீது..

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர் பேஜ், காலண்டர் அட்டைக்கு என தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அவர் யானை மீது நடத்திய போட்டோ ஷுட் பெரும் பிரபலமானது.

சேலை போட்டோக்கள்

சேலை போட்டோக்கள்

தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார் சாக்ஷி. ட்ரெடிஷ்னல் மாடர்ன் என பல விதமான லுக்குகளில் கலக்கி வருகிறார். சாக்ஷியின் சேலை போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலானது.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது என எல்லா போட்டோக்களையும் ஷேர் செய்து திணறடித்து வருகிறார். இதற்கு பலனாக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

படுக்கையில்..

படுக்கையில்..

அண்மையில் லெகாங்கா உடையில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஏஞ்சல் போன்று இருக்கிறீர்கள் என வர்ணித்தனர். அதனை தொடர்ந்து நைட் டிரெஸ்ஸில் படுக்கையில் ஏனோதானோ என இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து கிறங்க வைத்தார்.

வெறித்தன போஸ்

வெறித்தன போஸ்

பின்னர் மை ட்ரெடிஷ்னல் லுக் என பச்சை நிற தாவணியில் கிளாமர் காட்டி பதை பதைக்க வைத்தார். இந்நிலையில் கையில் உருட்டுக்கட்டையுடன் வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.

கையில் உருட்டுக்கட்டை

கையில் உருட்டுக்கட்டை

அதில் கண்களில் கோபம் தகிக்க, ஜீன்ஸ், ஷர்ட், ஷு என ஃபிரி ஹேரில் போஸ் கொடுத்துள்ளார். பார்க்கவே மிரட்டலாக உள்ளது அந்த போட்டோ. அதற்கு என்னை குறைத்து மதிப்பிடுங்கள், அது வேடிக்கையானதாக இருக்கும் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மரண மாஸ்

மரண மாஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன டெரர் போஸ் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் கண்ணுல நெருப்பு தெரியுது என்றும் மரண மாஸ் என்றும் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X