ஜீவா பர்ஃபாமன்ஸ் ஆஸம்.. சீறு படத்தை புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ் பிரபலம்!
Recommended Video
சென்னை: ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள சீறு மூவியை பிக்பாஸ் பெண் பிரபலம் ஒருவர் பாராட்டி தள்ளியிருக்கிறார்.
நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடந்த 7ஆம் தேதி வெளியான படம் சீறு. இந்த படத்தை இயக்குநர் ரத்ன சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் படம் உள்ளதாக விமர்சகனங்கள் எழுந்து வருகின்றனர்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியாகியுள்ள சீறு படம், பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் சீறு படம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சீறு - மகிழ்விக்க ஒரு சிறந்த வணிக படம். ஜீவா சார் பர்ஃபாமன்ஸ் ஆஸம், வருணின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. சாந்தினி, சுபி உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து பெண்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











