சும்மா சொல்லக்கூடாது.. ஃபுல் ஸ்லிவ் பிளவுஸ்.. பிளெய்ன் சாரி.. கிறங்க வைக்கும் சாக்ஷி!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் சேலையில் ஷேர் செய்திருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து டெடி, சிண்ட்ரெல்லா என அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் நடிகை சாக்ஷி அகர்வால்.

ஃபிட்னஸில் கவனம்

ஃபிட்னஸில் கவனம்

தற்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் படப்பிடிப்புகள் இன்றி நடிகை சாக்ஷி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். ஹெல்த் மற்றும் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் சாக்ஷி, தொடர்ந்து வீட்டில் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

நாள்தோறும் ஒவ்வோரு வித்தியாசமான உடையில் உடற்பயிற்சி, யோகா என செய்து வருகிறார் சாக்ஷி. அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். அந்த வகையில் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோவையும் ஷேர் செய்தார்.

கலர் கலர் சேலை

கலர் கலர் சேலை

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஹெல்த் கான்ஷியஸை பாராட்டினர். உடற் பயிற்சி போட்டோக்கள் மட்டுமின்றி மாடர்ன் டிரெஸிலும் அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கலர் கலர் சேலைகளில் கலக்கல் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

த்ரோபேக் போட்டோ

த்ரோபேக் போட்டோ

அந்த வகையில் தற்போது சேலையில் ஒரு போட்டோவைஷேர் செய்துள்ளார் சாக்ஷி அகர்வால். அதில் கறுப்பு நிற ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் பர்ப்பிள் நிற சேலையில் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் சாக்ஷி. த்ரோபேக் என ஷுட்டிங்கின் போது எடுத்த போட்டோ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதயத்தை திருடுகிறார்

இதயத்தை திருடுகிறார்

சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எப்படி திருட கற்றுக்கொண்டீர்கள்? காவல்துறையே சாக்ஷியை கைது செய்.. அவர் எங்களின் இதயங்களை எல்லாம் திருடுகிறார் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், செம க்யூட் என வர்ணித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X