யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: யாரும் அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என வனிதாவின் திருமணம் குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி தனது காதலாரான பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

ஆனால் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால் அவரது திருமணம் பெரும் சர்ச்சையானது.

பிரபலங்கள் கேள்வி

பிரபலங்கள் கேள்வி

அடுத்தவர் கணவரை வனிதா அபகரித்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் வனிதா ஏமாந்துவிட்டாரா என்றும் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலருமே வனிதா எப்படி விவாகரத்து செய்யாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் என கேள்வி எழுப்பினர்.

மனிப்பு கேட்டனர்

மனிப்பு கேட்டனர்

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத வனிதா, தனது திருமணம் குறித்து பேசுபவர்களை எல்லாம் கண்டமேனிக்கு விளாசி வருகிறார். வனிதாவின் வசவுகளை பொறுக்கமுடியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் அண்மையில் மன்னிப்பு கேட்டனர்.

குழந்தை அல்ல

குழந்தை அல்ல

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது வனிதா ஒன்றும் இரண்டாவது படிக்கும் பெண் அல்ல ஏமாறுவதற்கு. அவருக்கு எது சரி எது தவறு என்று தெரியும் என தெரிவித்துள்ளார்.

பேசாமல் இருந்தாலே போதும்

பேசாமல் இருந்தாலே போதும்

என்ன நடந்திருந்தாலும் அது வனிதாவுக்கு தெரிந்துதான் நடந்திருக்கும். இது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும். வனிதா பல விஷயங்களை தாண்டிதான் வந்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
சாக்ஷி தனக்கு ஆதரவாக பேசியதை அறிந்த நடிகை வனிதா அவருக்கு டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X