Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
உருகி உருகி காதலித்தேன்..இப்படி ஆகும்னு நினைக்கல..காதலன் குறித்து மனம் திறந்த சாக்ஷி அகர்வால்!
சென்னை : நடிகை சாக்ஷி அகர்வால் தனது காதல் குறித்தும், காதலன் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால், முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.
ராஜா ராணி, விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுக்கு
என்
அந்தரங்க
பாகங்கள்
தெரியணும்..
பாஜக
தலைவர்
புகாருக்கு..
டிவி
நடிகை
திமிரான
பதிலடி!

நடிகை சாக்ஷி அகர்வால்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அதன் பிறகு பிரபலமானார். தற்போது ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால், பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட், நான் கடவுள் இல்லை, கேஸ்ட் சாப்டர்2, குறுக்கு வழி என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

இணையத்தில் படு ஆக்டிவ்
சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு தினமும், வலைத்தள பக்கத்தில் அதிரிபுதிரியாக கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நான் கடவுள் இல்லை
இந்நிலையில், எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாக்ஷி அகர்வால், நான் கடவுள் இல்லை படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் வரும் பல சண்டை காட்சியில் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்துள்ளதாக கூறினார்.

உருகி உருகி காதலித்தேன்
தொடர்ந்து பேசிய சாக்ஷி அகர்வால், நான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஒருவரை உருகி உருகி காதலித்தேன். எங்கள் காலேஜில் பாய்ஸ், கேர்ள்ஸ் பேசிக்கவே கூடாது, அப்படி பேசுனதைப் பார்த்தா அவ்வளவு தான் இதனால், நாங்க கண்ணாலத்தான் பேசிப்போம், நான் காதலித்த நபர் ஹாஸ்டலில் இருந்ததால், மாசத்திற்கு ஒரு முறைதான் வெளியில் சந்தித்து பேசுவோம் அது ஒரு அழகான காதல்.

இப்படி ஆகும்னு நினைக்கல
இப்படியே நாங்கள் 4 வருடங்கள் காதலித்தோம் ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். இருவரும் இப்படி பிரிந்து விடுவோம் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. இருந்தாலும் அந்த முதல் காதல் மனதிற்குள் பசுமையாகவே இருக்கு என்று கூறியுள்ளார்.