twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களை மையப்படுத்தும் கதைகளை வரவேற்கும் OTT தளங்கள்.. இதுதான் காரணம்.. மனம் திறந்த பிரபல நடிகை!

    |

    ஹைதராபாத்: தியேட்டர்களை விட பெண்களை மையப்படுத்தும் கதைகளை OTT வரவேற்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Penguin தொடர்ந்து அடுத்த OTT Release Danny | Varalakshmi Sarathkumar

    தமிழில் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் என இரு படங்களும் பெண்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற உமன் சென்ட்ரிக் திரைக்கதையை எழுதவே தற்போது அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் வலியுறுத்தி வருகிறதாம்.

    ஓ.டி.டி-யில் வெளியாகிறது இன்னொரு ஹீரோயின் படம்.. கல்லூரி, கன்னித்தன்மை..அப்படி இப்படி கதையாமே? ஓ.டி.டி-யில் வெளியாகிறது இன்னொரு ஹீரோயின் படம்.. கல்லூரி, கன்னித்தன்மை..அப்படி இப்படி கதையாமே?

    தியேட்டர்களை நம்பும் ஹீரோக்கள்

    தியேட்டர்களை நம்பும் ஹீரோக்கள்

    பெரிய நடிகர்கள் யாரும், தங்கள் படங்களை தற்போதைக்கு OTT தளம் எனப்படும் ஆன்லைனில் நேரடியாக வெளியிடுவதற்கு தென்னிந்தியாவில் ஆர்வம் காட்டுவதில்லை. தியேட்டர்களின் திறப்புக்காகவே விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் காத்திருக்கின்றன.

    பெண்களை மையப்படுத்தி

    பெண்களை மையப்படுத்தி

    தியேட்டர்களில் அதிகமாக வரவேற்பு பெறவில்லை என்றாலும், பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்த கொண்ட அமேசான் பிரைம், ஆஹா உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள், பெண்களை மையப்படுத்தி வெளியாகும் கதைகளை விரும்பி வெளியிட முனைப்பு காட்டி வருகின்றன.

    நல்ல விலை

    நல்ல விலை

    மேலும், தியேட்டர்களை வாங்குவதை விட ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை மதித்து, இதுபோன்ற OTT தளங்கள் நல்ல விலைக்கு, படங்களை வாங்கிக் கொண்டு, தங்களுக்கு இருக்கும், உலகளாவிய சப்ஸ்கிரைபர்கள் மத்தியில் படத்தை வெளியிட்டு பணத்தை பார்த்து அமோகமாக வியாபாரம் நடப்பதால் இதை பின்பற்ற தொடங்கி இருக்கின்றனர்.

    பானுமதி ராமகிருஷ்ணா

    பானுமதி ராமகிருஷ்ணா

    தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது தெலுங்கில் பானுமதி ராமகிருஷ்ணா எனும் படம் வரும் ஜூலை 3ம் தேதி ஆஹா எனும் OTT தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் நாயகி சலோனி லுத்ரா சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அந்த படம் குறித்து பேசியுள்ளார்.

    30 வயசு ஆனால் என்ன

    30 வயசு ஆனால் என்ன

    30 வயது வரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால், இந்த சமூகம் அந்த பெண்ணின் வாழ்க்கையே முடிந்து போய்விட்டது போல பேசுவதை முடிவுக்கு கொண்டு வரவே இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், 30 வயதுக்கு பின்பும், ஒரு பெண்ணுக்கு காதல் மலர்ந்து, திருமணம் கை கூடும் என்பதையே பானுமதி ராமகிருஷ்ணா படம் கூறப்போகிறதாம்.

    மூட நம்பிக்கைகளை உடைக்கும்

    மூட நம்பிக்கைகளை உடைக்கும்

    இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோத்தி இயக்கத்தில் நவீன் சந்திரா மற்றும் சலோனி லுத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் பானுமதி ராமகிருஷ்ணா படம், மக்களிடையே நிலவும் இந்த திருமணம் பற்றிய மூட நம்பிக்கைகளை உடைக்கும் என்றும், பானுமதி கதாபாத்திரம் தனக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. படத்தை ஆன்லைனில் பார்த்தாலும், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என சலோனி கூறியுள்ளார். இவர் தமிழில் வெளியான சரபம் மற்றும் வினோதன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

    English summary
    Society labels this 30-year-old woman as irresponsible onlybecause she refuses to get married. But Bhanumathi believes that the age of 30 is not the end of a woman's life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X