கழுத்தை இப்படி சாய்த்து, அப்படி போஸ்.. ஆஸி.யில் இருந்து ஹீரோயின் வெளியிட்டுள்ள அம்மாடியோவ் போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகை ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர் சலோனி சோப்ரா. பேஷன் டிசைன் படப்பிடிப்புக்காக இந்தியா வந்தவர் குறும்படம் ஒன்றில் நடித்தார்.
மாயா என்ற அந்த குறும்படம் கான் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. பின்னர் மாடலிங்கில் இறங்கினார்.

பாலிவுட் நடிகர்கள்
பிறகு எம்.டிவி சேனலில் ஒளிபரப்பான கேர்ள்ஸ் ஆன் டாப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். டிவியில் நடிக்க தொடங்கிய இவர், சல்மான் கானின் ரேஸ் 3 படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். ஸ்க்ரீவ்ட் அப் உள்பட சில தொடர்களில் நடித்துள்ளார். சத்யஜித் துபே உள்பட சில பாலிவுட் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் சலோனி.

மீ டூ விவகாரம்
ஹாலிவுட்டை தாக்கிய மீ டூ விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பான போது, இவரும் பிரபல இயக்குநர் சஜித் கான் மேல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். சஜித் கான் மீது பல பெண்கள் பாலியல் புகாரை கூறியிருந்தனர். இது அப்போது, பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை அவர் அப்போது மறுத்திருந்தார்.

ஆஸ்திரேலியா
கொரோனா லாக்டவுன் காரணமாக ஆஸ்திரேலியா சென்றுவிட்ட சலோனி, அங்கிருந்தபடி அடிக்கடி பிகினி உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் இவருக்கும் ஏகப்பட்ட பாலோயர்கள். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஸ்பெஷல் போட்டோ
இதற்காகவே ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்துகிறார். வெறும் சட்டையை மட்டும் அணிந்தபடி, சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஸ் ரசிகர்களை அதிர வைத்தது. இதற்கு ரசிகர்கள் கலாய் கமென்ட் அடித்திருந்தனர். இந்நிலையில் இப்போது மற்றொரு அதிரடி கிளாமர் போட்டோவை பதிவு செய்திருக்கிறார் சலோனி.

கால்கள் தெரிய
வெள்ளை உடையில் கால்கள் தெரிய அவர் அமர்ந்திருக்கும் போஸுக்கு ஆயிரக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர். பலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். அடுத்து எந்த படத்துல நடிக்கிறீங்க என்று சிலர் கேட்டுள்ளனர். சலோனியின் இந்த கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











