நோயிலிருந்து மீண்டு வரும் சமந்தா.. வெறித்தனமான வொர்க்அவுட் வீடியோ வெளியீடு!
சென்னை : நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பான படங்களில் கமிட்டாகி வருகிறார்.
சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா, படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
சமீபத்தில் சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. விரைவில் இவரது சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்ததன்மூலம் பாலிவுட்டிலும் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, அங்கும் அக்ஷய் குமாருடன் இணைந்து புதிய படத்தில் கமிட்டானார். காபி வித் கரண் நிகழ்ச்சியிலும் அக்ஷய் குமாருடன் இணைந்து பங்கேற்றார்.

அரியவகை நோய் பாதிப்பு
நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. அதிகமான படங்களில் கமிட்டாகி வந்தார். இதனிடையே விஜய் தேவரகொண்டாவுடன் பான் இந்தியா படமாக உருவாகிவந்த குஷி படத்திலும் நடித்து வந்தார். இந்நிலையில்தான் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.

யசோதா படத்தின் வெற்றி
இதையடுத்து கடந்த 7 மாதங்களாக அவர் புதிய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை. மாறாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் 33 கோடி ரூபாய் வசூலை கடந்ததாக தயாரிப்பு தரப்பு உற்சாகம் தெரிவித்துள்ளது.

சாகுந்தலம் படம் ரிலீஸ்
இதனிடையே விரைவில் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்தும் சமந்தா தற்போது மீண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகியிருந்த சமந்தா தற்போது மீண்டும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

பிட்னஸ் வீடியோக்கள் வெளியீடு
அடுத்தடுத்த தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் தனக்கு தானே நம்பிக்கை அளிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நண்பர்களுடன் தான் செலவழிக்கும் இனிமையான தருணங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பிட்னஸ் வீடியோ வெறித்தனமாக அமைந்துள்ளது.

ரசிகர்களின் அன்பு
சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அவர் நோய் பாதிப்பில் இருந்தபோதும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். அவரது படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமந்தா சிறப்பாக எதிர்கொள்ள ரசிகர்களின் இந்த அன்பும் காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











