Samantha : விவாகரத்துக்கு பிறகு சமந்தாவிற்கு கிடைத்துள்ள பெஸ்ட் ப்ரெண்ட் யாரு தெரியுமா?

ஐதராபாத் : நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்து வருகிறார். பாலிவுட் படங்களிலும் வெப் தொடரிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் வரும் 14ம் தேதி சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் தற்போது சமந்தா ஈடுபட்டுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படமும் பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

Actress Samantha answer about her best friend in Twitter question and Answer

நடிகை சமந்தாவின் பெஸ்ட் பிரெண்ட் : நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர். விஜய்யுடன் இவர் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில், விஜய்க்கு சமந்தா பெஸ்ட் காம்பினேஷன் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு இவர்களது கெமிஸ்ட்ரி இருந்தது. ரசிகர்களும் இந்தப் படங்களை கொண்டாடினார்கள்.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார் சமந்தா. தொடர்ந்து பாலிவுட்டிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து சிறப்பான கமெண்ட்ஸ்களை வாங்கிய சமந்தா, மீண்டும் அவர்களது இயக்கத்திலேயே அடுத்த வெப் தொடரில் கமிட்டாகியுள்ளார். சில பாலிவுட் படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான யசோதா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியான இந்தப் படம் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. வசூலிலும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் வரும் 14ம் தேதி சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் சமந்தா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Actress Samantha answer about her best friend in Twitter question and Answer

சமீபத்தில் கேரளா, ஐதராபாத் போன்ற இடங்களில் அவர் பிரமோஷன்களில் ஈடுபட்ட நிலையில், ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அவருக்கு கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் தற்போது கண்ணாடி சகிதம் டீன் ஏஜ் லுக்கில் காணப்படுவது குறித்து குறிப்பிட்ட ரசிகர் ஒருவர், இனிமேல் இப்படித்தானா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த சமந்தா, தற்போது தனக்கு கிடைத்திருக்கும் பெஸ்ட் பிரெண்ட் கண்ணாடிதான் என்று தெரிவித்துள்ளார். சாகுந்தலம் படத்தின் பிரமோஷன்களில் மிகவும் க்யூட்டாக கலந்துக் கொண்டு வருகிறார் சமந்தா. அவரது பழைய லுக் இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்ற போதிலும் கோட் சூட் சகிதம் பெரிய கண்ணாடியுடன் அவரது சமீபத்திய லுக் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X