குவியும் பாலிவுட் வாய்ப்பு.. தங்கி நடிக்க வசதியாக மும்பையில் வீடு வாங்கும் சமந்தா!
சென்னை: நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகைகள் பலருக்கும் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்பது தீராக் கனவாக உள்ளது.
ஸ்ரீதேவி, டாப்ஸி, ரகுல் பிரித் சிங் போன்ற சில நடிகைகள் பாலிவுட்டுக்கு சென்று ஷைனாகியுள்ளனர்.

ஆளை விடுங்க
சில நடிகைகள் இருந்த வாய்ப்புகளையும் இழந்து ஃபீல்டு அவுட்டும் ஆகியுள்ளனர். சில நடிகைகள் ஆளை விடுங்க சாமி என மீண்டும் கோலிவுட் டோலிவுட் என திரும்பியிருக்கிறார்கள்.

வெப் சீரிஸ்கள்
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு என உச்ச நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் சமந்தா வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

போராளி கதாப்பாத்திரம்
அண்மையில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 வெப் சீரிஸ் மூலம் இந்தியிலும் என்ட்ரி கொடுத்தார் சமந்தா. இந்த தொடரில் சமந்தா நடித்த போராளி கதாபாத்திரம் விமர்சனத்துக்குள்ளானாலும் வரவேற்பு கிடைத்தது.

மும்பையில் வீடு
தொடர்ந்து இந்தி வெப் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் மும்பையில் தங்கி நடிப்பதற்காக வீடு பார்க்கிறார் சமந்தா.

மகேஷ் பாபுவுடன் சகுந்தலம்
தற்போது சமந்தா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுடன் சகுந்தலம் எனும் புராண படத்தில் சகுந்தலையாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் தயாராகிறது.

சமந்தா கைவசம் படங்கள்
இதுதவிர, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் சமந்தா கைவசம் உள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











