இந்த வாரம் ஃபுல்லா ..எங்க வீட்டுல கேரட் மெனுதான்.. சமந்தாவின் கேரட் ஸ்பெஷல் !

ஹைதராபாத் : இந்த நீண்ட லாக்டவுனில் நடிகர் நடிகைகள் ஒருபுறம் படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் ஒருவகையில் பாடாய் படுத்தி வந்தாலும் மற்றொரு வகையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த வைத்துள்ளது.

Recommended Video

Samantha Nargajuna Green India Challenge • Blissful Video

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா முதல் முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் நேரத்தில் தோட்டத்தில் பல்வேறு காய்கறி செடிகள் மற்றும் பழச் செடிகளை நட்டு அதை புகைப்படங்களாக எடுத்து பதிவிட்டு வந்த சமந்தா இப்பொழுது வீட்டு தோட்டத்தில் விளைந்த கேரட்டில் விதவிதமாக சமையல் செய்து அசத்தப் போகிறேன் என ஒரு அசத்தலான பதிவை போட்டிருக்கிறார்.

முழுநீள கதாநாயகியாக

முழுநீள கதாநாயகியாக

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தா, அதர்வாவுடன் இணைந்து "பானா காத்தாடி" படத்தில் முழுநீள கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். க்யூட்டான சிரிப்பு கொஞ்சும் நடிப்பு என ரசிகர்களுக்கு பிடித்தவாறு இருந்த சமந்தாவை ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிக அளவில் பின் தொடர ஆரம்பித்தனர்.

அதேசமயம் தெலுங்கிலும்

அதேசமயம் தெலுங்கிலும்

தமிழில் நடித்துக் கொண்டிருந்த அதேசமயம் தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆர் மற்றும் மகேஷ்பாபு என முன்னணி நாயகர்களுடன் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமான சமந்தா, ராஜமவுலி இயக்கிய " நான் ஈ" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி சிறந்த நடிகைக்காக பல்வேறு விருதுகளை வென்றார்.

ரசிகர்களின் பாராட்டுக்களை

ரசிகர்களின் பாராட்டுக்களை

பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் சமந்தா சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா உடன் இணைந்து கிரீன் இந்தியா சேலஞ்சை செய்து காட்டி அசத்தியதுடன் அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

செம ஜாலியாக

செம ஜாலியாக

இப்பொழுது வீட்டுத்தோட்டத்தில் மளமளவென விளைந்திருக்கும் பிரஷ்ஷான கேரட்களை கொத்தாக பிடுங்கி கையில் வைத்தவாறு, இந்த வாரம் ஃபுல்லா எங்க வீட்டில கேரட் மெனுதான் என செம ஜாலியாக கூறியுள்ளார்.

மிகத்தீவிரமாக பதிவிட்டு

மிகத்தீவிரமாக பதிவிட்டு

கேரட்டில் எத்தனை வகையான உணவுகள் இருக்கிறதோ அத்தனையையும் வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் சமந்தா அதில் கேரட் ஜூஸ், கேரட் பச்சடி, கேரட் அல்வா, கேரட் பிரை, கேரட் பக்கோடி, கேரட்ட இட்லி, கேரட் சமோசா மற்றும் கேரட் கேக் என கேரட்டில் எந்தெந்த வகையான அயிட்டங்கள் செய்ய முடியுமோ அனைத்து அயிட்டங்களையும் வீட்டில் விளைந்திருக்கும் கேரக்டர்களை வைத்து செய்ய இருக்கிறேன் என மிகத்தீவிரமாக பதிவிட்டு இருக்கும் இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன், அதில் ஒருவர் "நீங்க என்ன டின்னருக்கு கூப்பிடுவீங்கன்னு சொல்லி காலையிலிருந்து சாப்பிடாம காத்துகிட்டு இருக்கேன்" என்றவாறு பீல் பண்ணி கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X