ஓட்ஸ் கேரட் இட்லி செய்து கொடுத்த சமந்தா.. சூப்பர் என பாராட்டிய ராம்சரண் மனைவி!

ஹைதராபாத் : நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவிக்கு புதுவிதமான டிஷ் செய்து கொடுத்து அசத்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

நடிப்பில் மட்டுமல்லாமல் சமையலிலும் கைதேர்ந்தவரான நடிகை சமந்தா அவ்வப்போது குக்கிங் வீடியோக்களை வெளியிட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

புது புது டிஷ் வகைகளை கண்டு பிடித்து செய்து வருவதில் ஆர்வம் கொண்ட நடிகை சமந்தா இப்பொழுது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவியும் தொழிலதிபருமான உபசனா கமிநேனிக்கு ஓட்ஸ் கேரட் இட்லி என்ற புதுவிதமான டிஷ்ஷை செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

பட்டையை கிளப்பி

பட்டையை கிளப்பி

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து தமிழ் தெலுங்கு என பட்டையை கிளப்பி வருகிறார்.

ஜானு கதாபாத்திரத்தில்

ஜானு கதாபாத்திரத்தில்

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சர்வானந்த் உடன் இணைந்து ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த சமந்தா அதை தொடர்ந்து பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல் முறையாக

முதல் முறையாக

தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து " காத்துவாக்குல இரண்டு காதல்" திரைப்படத்தில் நடித்து வர அதன் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

சமையலிலும் கெட்டிக்காரர்

சமையலிலும் கெட்டிக்காரர்

இவ்வாறு தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்லாமல் சமையலிலும் கெட்டிக்காரர் ஆவார்.

புதுவிதமான டிஷ்

புதுவிதமான டிஷ்

புதுப்புது வகையான டிஷ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சமந்தா தான் சமைக்கும் பல்வேறுவிதமான சமையல் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டுகளைப் பெற்று வர இப்பொழுது பிரபல நடிகரின் மனைவிக்கு புதுவிதமான டிஷ் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

நெருங்கிய தோழிகளாக

நெருங்கிய தோழிகளாக

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம்சரணின் மனைவியும் பிரபல தொழிலதிபருமான உபசனா கமிநேனியும் நடிகை சமந்தாவும் பல ஆண்டுகளாக நெருங்கிய தோழிகளாக பழகி வர இப்பொழுது உபசனா கமிநேனிக்காக "ஓட்ஸ் கேரட் இட்லி" என்ற புது விதமான ஆரோக்கியமான இட்லி வகை ஒன்றே சமைத்து பரிமாறி அசத்தியுள்ளார்.

ரொம்ப சூப்பரா இருக்கு

ரொம்ப சூப்பரா இருக்கு

இந்த புதுவிதமான ஆரோக்கியமான ஓட்ஸ் கேரட் இட்லியை சுவைத்துப் பார்த்த உபசனா கமிநேனி அதை ரசித்து ருசித்தவாறு தமிழில் " ரொம்ப சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என கூறியிருக்கும் இந்த வீடியோ இப்பொழுது ரசிகர்களின் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X