அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
சென்னை : அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சமந்தா இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த பல லைக்குகளை பெற்று டிராண்டிங்கில் உள்ளது.

பீஸ்ட்
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

3வது முறையாக
நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

அரபிக்குத்து
பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடலின் லிரிக் வீடியோ காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி வெளியானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இணைந்து பாடி இருந்தனர். பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூப் தளத்தில் 2.5 கோடி பார்வையாளர்களை பெற்று 22 லட்சம் லைக்குகளை பெற்றது. 3 நாளில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

கலக்கல் டான்ஸ்
பலரையும் கவர்ந்துள்ள இந்த பாடலுக்கு பல திரைப்பிரபலங்கள் நடனமாடி வரும் நிலையில், நடிகை சமந்தா இந்த பாடலுக்கு கலக்கலாக நடனமாடி உள்ளனர். அவர், அந்த வீடியோவை பதிவிட்ட 12 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். தற்போது சமந்தா ஆடிய நடனம் இணையத்தில் டிரண்டிங்கில் உள்ளது. பல ரசிகர்கள் ஹீரோயினா உங்களைப் போட்டு இருக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











