அந்த விஷயத்துல என் அம்மா மீது எனக்கு எப்பவுமே வருத்தம் உண்டு.. சமந்தா பளீச்!
திருவனந்தபுரம் : நடிகை சமந்தா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான யசோதா படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது.
இந்நிலையில் வரும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி அவரது சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இதையொட்டி பல இடங்களில் சமந்தா படத்தின் பிரமோஷன்களை செய்து வருகிறார். தற்போது கேரளாவில் அவர் சாகுந்தலம் படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் படம் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளது.

வெப் தொடர்களில் சமந்தா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகமாக நடித்துள்ள சமந்தா, இந்தியிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், மீண்டும் அவர்களின் இயக்கத்திலேயே வெப் தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சில பாலிவுட் படங்களிலும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைவடைந்த குஷி படத்தின் சூட்டிங்
அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்தப் படம் செப்டம்பரில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய திருமணம், விவாகரத்து முடிவு, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சமந்தா. தற்போது நாக சைத்தன்யாகவின் டேட்டிங் குறித்து சமந்தா கோபமடைந்து பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

கேரளாவில் சாகுந்தலம் பிரமோஷன்
ஆனால் இதை சமந்தா மறுத்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். இதனிடையே சாகுந்தலம் படத்தின் பிரமோஷன்களில் சமந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், தற்போது கேரளாவின் கொச்சியில் படத்தின் பிரமோஷன்களுக்காக செய்தியாளர்களை சந்தித்துள்ளார் சமந்தா.

மலையாளப்படங்களில் கற்ற சமந்தா
அப்போது பேசிய சமந்தா, தான் மலையாளப்படங்களில் இருந்து அதிகமாக கற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசிலின் நடிப்பை பார்த்து தான் வியப்படைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துவருவதாகவும் தனக்கும் மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் சமந்தா தெரிவித்தார். ஆனால் தனக்கு மலையாளம் தெரியாததால் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அம்மா மீது வருத்தம்
தன்னுடைய அம்மா ஒரு மலையாளியாக இருந்தும்கூட தனக்கு மலையாளம் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிட்டதாகவும் இதுகுறித்து தன்னடைய அம்மாமீது தனக்கு வருத்தம் உள்ளதாகவும் சமந்தா தெரிவித்தார். மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், மலையாளம் கற்றுக் கொண்டு தானே பேசுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











