Samantha: புஷ்பா 2விலும் இணையும் சமந்தா.. ஊ சொல்றியா 2விற்கு தயாராகும் டீம்!

சென்னை: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சுகுமார் இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Samantha going to join for Pushpa 2 for a song it seems

புஷ்பா படம்: நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த புஷ்பா படம் கடந்த 2021ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 400 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூல் செய்து மாஸ் காட்டியது. படத்தில் கொண்டாட்டத்திற்குரிய பல அம்சங்கள் இருந்த நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் அதிகமான கவனத்தை பெற்றன.

சமந்தாவின் பாடல்: குறிப்பாக படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு சிறப்பான ஆட்டம் போட்டிருந்தார். ஊ சொல்றியா மாமா என்று அவர் கிறக்குடன் ஆடிய ஆட்டத்திற்கு ரசிகர்கள் அதிகமாக மயங்கித்தான் போனார்கள். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவையும் இந்தப் பாடல்மூலம் சமந்தா ஓரங்கட்டினார். நாக சைத்தன்யாவுடனான விவாகரத்து சர்ச்சைகளில் சமந்தா சிக்கியிருந்த சூழலில் வெளியான இந்தப் பாடல் அவருடைய கேரியரில் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தது.

புஷ்பா 2 படம்: இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர். அடுத்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இதற்கேற்ப படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் அதிகமான கவனத்தை சமந்தாவின் பாடல் பெற்றது.

புஷ்பா 2வில் இணையும் சமந்தா: இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஒரு பாட்டிற்கு சமந்தாவை ஆட வைக்க படக்குழுவினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தன்னுடைய சிகிச்சைக்காக ஓய்வில் உள்ள சமந்தா, இந்தப் பாடல்மூலம் மீண்டும் ரீ என்ட்ரியை சிறப்பாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பாடலுக்கான வேலைகளை தேவிஸ்ரீ பிரசாத் முடித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களை கவர்ந்த சமந்தா: முதல் பாகத்தில் படத்தின் கொண்டாட்டத்திற்கு அதிகமான விஷயங்கள் இருந்த போதிலும் சமந்தா இந்தப் பாடல்மூலம் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை கவரும்வகையில் மீண்டும் சமந்தாவை படத்தில் இணைக்கும் தயாரிப்புத் தரப்பினரின் இந்த முயற்சி கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பாடல் எப்படி அமையும் என்று தற்போதே ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X