Samantha - மனதுக்கு பிடித்த இடத்தில் இருக்கிறேன்... இன்ஸ்டாவில் பயங்கரமாக ஃபீல் செய்த சமந்தா
சென்னை: Samantha (சமந்தா) நடிகை சமந்தா தன் மனதுக்கு பிடித்த இடத்துக்கு சென்றது குறித்து இன்ஸ்டாகிராமில் ஃபீல் செய்து பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து பரஸ்பரமாக இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சமந்தாவின் கிராஃப்: விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கான க்ரேஸை ரசிகர்கள் மத்தியில் ஏற்றினார் சமந்தா. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்காத சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.
மீண்டும் படங்களில்: மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பிய சமந்தா மீண்டும் திரைப்படங்களில் கமிட்டானார். அப்படி அவர் நடித்த சாகுந்தலம் படம் அட்டர் ப்ளாப் ஆனது.சமந்தாவின் கரியரிலேயே படுதோல்வியை சந்தித்த படமாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க கமிட்டானார்.
மீண்டும் சிகிச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் மீண்டும் நோயின் தீவிரம் அதிகரித்ததாக தகவல் வெளியான சூழலில் சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அவர் அறிவித்து வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார்.
குஷி சமந்தா: சூழல் இப்படி இருக்க சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நடித்த குஷி படம் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனால் அவர் குஷியாக இருக்க. இருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் அவர் கமிட்டாகவில்லை. இந்நிலையில் The Sound of Music என்ற ஹாலிவுட் படத்தை எடுத்த லொகேஷனுக்கு சென்றிருக்கிறார் சமந்தா.
சமந்தாவின் ஃபீலிங்: அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் சிறுபிள்ளையாக இருந்தபோது சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் நான் மீண்டும் மீண்டும் The Sound of Music படத்தை பார்ப்பேன். அந்தப் படத்தை பார்த்தால் கனவு உலகுக்கு செல்வது போல் இருக்கும். பெரியவளான பிறகும் அந்தப் படத்தை திரும்ப திரும்ப பார்க்கிறேன். அந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் அப்படியே நம் குழந்தை பருவத்துக்கு அழைத்து செல்கிறது. அந்தப் படம் எடுக்கப்பட்ட லொகேஷனுக்கு வந்திருப்பது எனக்கு ஸ்பெஷல்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











