நான் இன்னும் 1 கோடி ரூபாய் கூட சம்பளம் வாங்கலை… சமந்தா

By Mayura Akilan

Samatha
ஹைதராபாத்: சினிமாவில் நடிக்க 1.75 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ்,தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார் சமந்தா. எந்த அளவிற்கு பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரைப்பற்றி கிசுகிசுவும் பரவுகிறது.

காதல் கிசுகிசுவை அடுத்து அவர் தன்னுடைய சம்பளத்தை 1.75 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சமந்தா.

ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

சம்பளம் விஷயத்தில் எனக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன. நான் ரூ.1 கோடியே 75 லட்சம் சம்பளம் கேட்பதாக செய்திகள் பரவியுள்ளன. இது தவறான தகவல். நான் யாரிடமும் அவ்வளவு தொகை கேட்கவில்லை. எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு தைரியம் இல்லை.

சம்பளத்தை திருப்பித் தருவேன்

ஆறு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த படங்களின் தகாரிப்பாளர்களிடம் விசாரித்து நான் ரூ.1 கோடியே 75 லட்சம் சம்பளம் வாங்கியதாக நிரூபித்தால் வாங்கிய சம்பளம் அனைத்தையும் திருப்பி தந்துவிட தயாராக இருக்கிறேன்.

அனைத்தும் ஹிட்

தமிழ், தெலுங்கில் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளது. மேலும் அரை டஜன் படங்கள் கைவசம் இருக்கிறது. தெலுங்கில் நடித்த ஆட்டோ நகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

ரூ.1 கோடி கூட வாங்கலை

என் அதிர்ஷ்டத்தால் படங்கள் நன்றாக ஓடுகின்றன. அதில் சந்தோஷம் அடைகிறேன். ஆனால் என்னுடைய சம்பளம் இன்னும் ரூ.1 கோடியை எட்டவில்லை என்று கூறினார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X