Actress Samantha: மம்முக்காவுடன் ஜோடி சேரும் சமந்தா.. மலையாளத்தில் மாஸ் என்ட்ரி!

சென்னை: நடிகர் மம்முட்டி மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ஏராளமான ரசிகர்களை மலையாளத்தில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான காதல் தி கோர், பிரம்மயுகம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இணையவுள்ளார் மம்முட்டி. இந்தப் படம் மூலம் மலையாளத்தில் கௌதம் மேனன் என்ட்ரி கொடுக்க உள்ளார். கடந்த 2014ம் ஆண்டிலிருந்தே இந்தப் படம் குறித்த பேச்சுகள் நடந்துவந்தன. இந்நிலையில் இம்மாதம் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் வரும் 15ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Samantha Mammootty Gautham menon

இயக்குநர் கௌதம் மேனன்: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களை தமிழிலேயே இயக்கிய கெளதம் மேனனின் படங்கள் தெலுங்கு மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இருந்தபோதிலும் மலையாளியான அவர், மலையாளத்தில் இதுவரை ஒரு படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மம்முட்டியின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் கௌதம் மேனன்.

மம்முட்டியை இயக்கும் கௌதம் மேனன்: இம்மாதம் 15ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்க உள்ள நிலையில் வரும் 20ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங்கில் மம்முட்டி இணையவுள்ளார். ஆக்சன் திரில்லராக இந்தப் படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்றவர்களின் தயாரிப்பிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் இணைய உள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மம்முட்டி நடிப்பில் ஜோதிகா இணைந்து நடித்த காதல் தி கோர் மற்றும் பிரம்மயுகம் படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.

மம்முட்டி -சமந்தா கூட்டணி: இந்நிலையில் தற்போது மம்முட்டி -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. நடிகை சமந்தா மம்முட்டியுடன் இந்த படத்தில் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் மூலம் சமந்தாவும் முதல் முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மம்முட்டியுடன் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மம்முட்டியுடன் இணைந்து விளம்பரத்தில் சமந்தா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கௌதம் மேனன் -சமந்தா காம்போ: கௌதம் மேனனுடன் முன்னதாக யே மாயம் சேஸாவே மற்றும் நீதானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்துள்ளார் சமந்தா. இந்நிலையில் மீண்டும் அவரது இயக்கத்தில் சமந்தா இணையவுள்ளார். முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். நடிப்பு என்பது வசனம் பேசுவது இல்லை என்பதை தான் கௌதம் மேனனிடம் கற்றுக் கொண்டதாக முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார் சமந்தா. இந்நிலையில் மீண்டும் கௌதம் மேனனுடன் இணைந்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X