Samantha: ஆன்மீக சுற்றுலா ஓவர்... அடுத்தது என்ன ஃபாரின் ட்ரிப்தான்.. புது ஹேர்ஸ்டைலில் சமந்தா க்யூட்

பாலி: நடிகை சமந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

ஈஷா யோக மையத்தில் அவர் தியானம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் தற்போது அவர் வெளிநாட்டிற்கு தன்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் புது ஹேர்ஸ்டைலிலும் கலக்கி வருகிறார்.

Actress Samantha make a trip to Bali with her friends before treatment

பாலி தீவில் நண்பர்களுடன் சமந்தா சுற்றுலா: நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தன்னுடைய சினிமா கேரியரை சிறப்பாக வைத்துள்ளார். சர்வதேச அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். பாலிவுட்டிலும் வெப் தொடர்களில் நடித்துவரும் சமந்தா பான் இந்தியா ஸ்டாராக அனைவரையும் கவர்ந்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் செப்டம்பர் 1ம் தேதி குஷி படம் ரிலீசாகவுள்ளது. இதேபோல அவரது நடிப்பில் சிட்டாடல் இந்தியா வெப் தொடரும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதன் சூட்டிங் நிறைவடைந்ததை புகைப்படங்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொண்டார் சமந்தா.

சிட்டாடல் வெப் தொடரின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் சினிமாவில் நடிப்பதில் இருந்து கேப் விடவுள்ளதாக சமந்தா உறுதிப்படுத்தியிருந்தார். தன்னுடைய சிகிச்சைக்காக அவர் இந்த இடைவெளியை எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிற்கு அவர் சிகிச்சைக்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய மனதிற்கு இதம் தரும் வகையில் சமீப காலங்களாக அதிகமான ஆன்மீக சுற்றுலாக்களில் சமந்தாவை பார்க்க முடிகிறது.

Actress Samantha make a trip to Bali with her friends before treatment

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ஈஷா யோக மையத்தில் அவர் தியானம் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் மற்றவர்களுடன் இணைந்து அவர் காணப்பட்டார். மேலும் அந்த மையத்தின் அழகான இயற்கை காட்சிகளையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தற்போது சமந்தா வெளிநாட்டிற்கு தன்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். பாலி தீவில் இயற்கை தவழும் அழகான சுற்றுச்சூழலில் அவரை பார்க்க முடிந்தது. இதன் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ட்ரீம்ஸ் ஆன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பியையும் அவர் அணிந்திருந்தார். மேலும் தன்னுடைய தோழியுடன் இணைந்தும் அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Samantha make a trip to Bali with her friends before treatment

தன்னுடைய சிகிச்சையை துவங்குவதற்கு முன்னதாக இத்தகைய சுற்றுப்பயணங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் வேலூர் பொற்கோயில், கோவை ஈஷா யோக மையம், பண்ணாரி அம்மன் கோயில் என சுற்றிவந்தார் சமந்தா. தற்போது இந்தோனேசியாவின் பாலித் தீவில் நண்பர்களுடன் அவரை பார்க்க முடிகிறது. சிகிச்சையில் ஈடுபட்டால் இத்தகைய சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள முடியாது என்பதால் அவர் முன்னதாகவே தன்னுடைய ஆன்மீக மற்றும் மகிழ்ச்சிச் சுற்றுலாக்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X