»   »  திருப்பதியில் சமந்தா சாமி தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்

திருப்பதியில் சமந்தா சாமி தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.

தெலுங்கில் பிரபல திரைப்பட நடிகர் நாகார்ஜூனா மகனும் நடிகருமான நாக சைத்தான்யாவுடன் சமந்தாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

Actress Samantha offer prayer in Tirupathi

திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகை சமந்தா நேற்று அதிகாலை சுப்பரபாதம் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

தரிசனம் முடிந்த பின்னர் பிரகாரங்களை வலம் வந்த போது ரசிகர்கள் பலரும் சமந்தா உடன் செல்ஃபி எடுத்தனர்.

நடிகை சமந்தா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது சமந்தா இதில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Samantha visited Tirumala Tirupati temple and offered special poojas and prayers to the presiding deity Lord Venkateswara Swamy during suprapatha Dharisanam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil