விவாகரத்து குறித்து பேசிய சமந்தா.. பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்பு!
சென்னை : பாலிவுட்டின் சிறப்பான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனியார் சேனலில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்த நிலையில், தற்போது 7வது சீசன் வரும் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர்கள் குறித்து காணப்படுகிறது.

காபி வித் கரண் நிகழ்ச்சி
பாலிவுட்டின் சிறப்பான படங்களை இயக்கிவரும் பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனியார் சேனலில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.

ஜூலை 7ல் துவக்கம்
கடந்த 6 சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை துவங்கவுள்ளது. வரும் 7ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கத் துவங்கியுள்ளனர்.

மனம் திறக்கும் பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது மனம் திறந்து பேசுவது வாடிக்கை. மேலும் நிகழ்ச்சியில் விளையாட்டுக்களும் நடக்கும். கேள்வி பதில்கள் சிறப்பான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபலங்களிடம் கேட்கப்படும். அவர்கள் அதற்கு சிறப்பான வகையில் பதிலளிப்பதும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

அதிர்ச்சி கொடுத்த கரண் ஜோகர்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி இனி தொடராது என்று கரண் ஜோகர் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது 7வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 2004ல் துவங்கப்பட்டது. கடந்த 2019ல் இதன் 6வது சீசன் நிறைவடைந்தது.

7வது சீசன்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் மிகவும் அட்டகாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆலியா பட், ரன்பீர் சிங், சாரா அலிகான், ஜான்வி கபூர் என பிரபல பாலிவுட் பிரபலங்கள் இதில் காணப்படுகின்றனர். மேலும் அக்ஷய் குமாருடன் சமந்தாவும் இடம்பெற்றுள்ளார்.
Recommended Video

சமந்தா பங்கேற்பு
கோலிவுட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் சமந்தா. அவர் தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய இருப்பை பதிவு செய்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் அக்ஷயுடன் பங்கேற்றுள்ளார். அவர் மிகவும் செக்சியான உடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் தன்னுடைய விவாகரத்து குறித்தும் பேசியுள்ளார்.
கேஜிஎப் வாழ்க்கை
நாம்தான் நம்முடைய மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கைக்கு காரணம் என்றும் நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போதுதான் வாழ்க்கை கடினமானதாக மாறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். நாம் அதிகமான எதிர்பார்ப்பை வாழ்க்கையில் வைத்தால் அது நமக்கு கேஜிஎப் போன்ற வாழ்க்கையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











