Samantha Father Death: சமந்தாவை நினைத்து கலங்கிய தந்தை.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!
சென்னை: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமந்தா, வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்த போது அவருக்கு பெரும் ஆதரவாக இருந்த அவரின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பல கனவுகளுடன் சமந்தாவை வளர்த்த அவர் கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலே உயிரிழந்துள்ளார்.
தெலுங்கு - ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு மலையாள பாரம்பரியத்தின் பின்னணியில் இருந்து வந்தவர். மனைவி நினெட்,மகன்களான ஜொனாதன், டேவிட் மற்றும் சமந்தாவுடன் பல்லாவரத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். சமந்தாவிற்கு நடிப்பின் மீது விருப்பம் இருந்ததால், கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த சமந்தா நாயுடு ஹால் விளம்பரத்தில் நடித்தார்.

நடிகை சமந்தா: அதைத்தொடர்ந்து, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து. தனது திறமையை வளர்த்துக்கொண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறி சமந்தா,நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அனைவரின் கண் படும்படி வாழ்ந்து வந்த இவர் 2021ம் ஆண்டு பிரிந்தனர்.
தந்தை உயிரிழந்தார்: விவாகரத்திற்கு பின் தொடர்ந்து படத்தில் நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் சமந்தாவை கவலையில் ஆழ்த்தும் வகையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலிவிற்கும் அடுத்த மாதம் திருமணம் நடந்துள்ளது. இப்படி தொடர்ந்து பல கஷ்டத்தை சந்தித்து வரும் சமந்தாவின் வாழ்க்கையில் பெரும் துயரம் நடந்துள்ளது. சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சியான தகவலை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
நிறைவேறாத ஆசை: சமந்தாவிற்கு ஆறுதலாக பக்க பலமாக இருந்த ஜோசப் பிரபு, மகளின் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா, நாக சைத்தன்யாவின் திருமண போட்டோவை ஷேர் செய்து, அதற்கு கேப்ஷனாக ஒரு காலத்தில் ஒரு கதை இருந்தது... ஆனால், அது தற்போது இல்லை. எனவே புது கதையை தொடங்குவோம், புது அத்தியாயத்தை தொடங்குவோம் என்று உருக்கமாக எழுதி இருந்தார். நாகசைத்தன்யா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், சமந்தாவும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் ஜோசப் பிரபு உயிரிழந்துள்ளார். இணையவாசிகள் பலர் அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











