Samantha :மணிரத்னம் படத்தை நிராகரித்த சமந்தா.. அதுவும் சரியாத்தான் இருக்கு!

ஐதராபாத் : சர்வதேச அளவில் கவனம் பெற்ற நடிகையாக காணப்படுகிறார் சமந்தா. இவரது கைவசம் அடுத்தடுத்த படங்கள் உள்ளன.

யசோதா படம் கொடுத்த சிறப்பான விமர்சனங்கள் மற்றும் வசூலை தொடர்ந்து வரும் 14ம் தேதி சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது.

Actress samantha rejects famous kollywood director Maniratnams film Kadal?

இந்தப் படத்தின் பிரமோஷனில் அடுத்தடுத்து கேரளா, ஐதராபாத், மும்பை என பறந்து பறந்து ஈடுபட்டுள்ளார் சமந்தா. நேற்றைய தினம் ட்விட்டரிலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மணிரத்னம் படத்தை நிராகரித்த சமந்தா? : நடிகை சமந்தா கடந்த 13 ஆண்டுகளை கடந்த சர்வதேச ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இருந்து வருகிறார். இவரது பல வெற்றிப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, சமந்தாவை முன்னணி நடிகையாகவே வைத்துள்ளது. நடிப்பை மீறி, இவரிடம் காணப்படும் கிரேஸ் ரசிகர்களை தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்களாகவே இருக்க வைத்து வருகிறது. திருமணம், விவாகரத்து முடிவு, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கினாலும் ரசிகர்களின் அன்பை மட்டும் சமந்தா இழந்துவிட வில்லை.

Actress samantha rejects famous kollywood director Maniratnams film Kadal?

தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தாவிற்கு இந்த பந்தம் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு நீடித்தது. நாகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் பிரியும் முடிவை எடுத்தபோது, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியடையவே செய்தனர். ஒருசிலர், இந்த பிரிவுக்கு சமந்தா தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர். முதலில் இத்தகைய கமெண்ட்டிற்கு எல்லாம் பதில் சொன்ன சமந்தா, ஒருகட்டத்தில் மௌனமானார். அவருக்கு இந்த சமயத்தில் ஆன்மீகமும் நண்பர்களும் சிறப்பாக கைக்கொடுத்தனர்.

சிறிது சிறிதாக இதிலிருந்து மீண்டு, தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார் சமந்தா. ஆனால் அவருக்கு மற்றொரு பேரிடி காத்திருந்தது. மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் தாக்குதலுக்கு உள்ளானார் சமந்தா. தற்போது இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டுள்ள சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவரது யசோதா படம் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 14ம் தேதி சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது.

Actress samantha rejects famous kollywood director Maniratnams film Kadal?

சாகுந்தலம் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக கேரளா, மும்பை என பறந்து பறந்து ஈடுபட்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில் நேற்றைய தினம் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்தார். இதன்போது பல கேள்விகளை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சமந்தாவும்தான். அவருடைய படங்கள், லுக் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகளுக்கு சமந்தா பொறுமையாக பதிலளித்தார்.

இதனிடையே முன்னதாக மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சமந்தா நிராகரித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்துவரும் நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற கடல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத்தான் சமந்தா நிராகரித்துள்ளார்.

Actress samantha rejects famous kollywood director Maniratnams film Kadal?

கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து, கடந்த 2013ம் ஆண்டில் வெளியானது கடல். இந்தப் படத்தில் புதுமுகங்களை லீட் கேரக்டர்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் மணிரத்னம். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X