தடபுடலாக நடந்த சமந்தாவின் அண்ணன் திருமணம்.. சமந்தா கொடுத்த பரிசை பாருங்க!
சென்னை: நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் ஜெனிவாவில் நடந்து முடிந்துள்ளது. தடபுடலாக நடந்த இந்த திருமண போட்டோக்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த தம்பதிகளுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா திகழ்ந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வரும் சமந்தா, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், சமந்தாவின் மூத்த சகோதரனின் திருமணம் விஸ்கான்சின் ஜெனீவா ஏரியில் நடைபெற்றது. இதில் சமந்தா தனது தாயார் நினெட் பிரபு மற்றும் அப்பா,அண்ணனுடன் ஊதா நிற ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

அண்ணன் திருமணம்: மேலும், அந்த உடைக்கு ஏற்றவாறு தனது தலைமுடியை நேர்த்தி படுத்தி இருந்த சமந்தா, ஜெனீவா ஏரியின் அழகிய பின்னணியில், கையில் பூக்களுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அண்ணன் திருமணத்திற்கு பூங்கொத்துத்தான் பரிசா என கேட்டு வருகின்றனர். மேலும், டேவிட் மற்றும் நிக்கோல் திருமண பத்திரிக்கையை பகிர்ந்து திருமணத்திற்கு வரவேற்கிறோம் என இதயம் ஈமோஜி பதிவிட்டுள்ளார். இணையத்தில் இந்த போட்டோக்கள் டிராண்டாகி வருகிறது.

அடுத்தடுத்த படங்களில் : சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சமந்தா, 2010ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய தெலுங்கு திரைப்படமான 'யே மாய சேசவே' மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 'பாணா காத்தாடி', 'பிருந்தாவனம்', 'நீதான் என் பொன்வசந்தம்', 'ராமையா வஸ்தாவய்யா', 'ராஜூ காரி காதி 2', 'ஓ பேபி', 'யசோதா', 'சாகுந்தலம்' குஷி என அடுத்தடுத்த படத்தில் நடித்தார். இதில் யசோதா, சாகுந்தலம் எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்றுத்தராமல் தோல்வித் திரைப்படமாக அமைந்தது. ஆனால், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த 'குஷி' ஓரளவிற்கு பெயர் சொல்லும் படமாக இருந்தது.

தி ஃபேமிலி மேன்: சமந்தா தற்போது ராஜ் & டி.கே உருவாக்கிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் தொடரான 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாவது சீசனில் ராஜி என்ற பாத்திரத்தில் நடித்தார். தேசிய புலனாய்வு ஏஜென்சியின் கண்காணிப்புப் பிரிவின் உளவுத்துறை அதிகாரியாக ரகசியமாகப் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்தார். மேலும், பிரியாமணி, ஷரத் கேல்கர், நீரஜ் மாதவ், ஷரிப் ஹாஷ்மி, தலிப் தஹில், சன்னி ஹிந்துஜா மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் நடித்திருந்தனர்.

சிட்டாடல்: ஹனி பன்னி: அதைத் தொடர்ந்து 'சிட்டாடல்: ஹனி பன்னி' ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியிக்கும் வெப் சீரிஸ் ஆகும். இதில் வருண் தவான், கே கே மேனன், சிம்ரன் பாக்கா மற்றும் எம்மா கேனிங் ஆகியோர் நடித்துள்ளனர். நவம்பர் 7ஆம் தேதி இந்த வெப் தொடரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த சீரிஸில் சமந்தா - வருண் ஜோடி இடையிலான கெமிஸ்ட்ரியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











