Samantha Ruth Prabhu: எல்லாம் முடிஞ்சு போச்சு.. சமந்தா செய்த அந்த காரியம்..சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில், நாக சைதன்யா நினைவாக போட்ட டாட்டூவை அழித்துள்ளார்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருக்கிறார். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

actress Samantha Ruth Prabhu removed tattoo

சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, குடும்பத்தை நடத்தி வந்தார். யார் கண் பட்டதோ நாக சைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

சமந்தா நாக சைதன்யா: சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 2ம் தேதி தாங்கள் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

சமந்தா டாட்டூ: நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யா மீது கொண்ட காதலால் தன் முதுகில் 'Ye Maaya Chesave' என்ற படத்தின் நினைவாக 'ymc' என்ற டாட்டூவும், மணிக்கட்டில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் ஒரே மாதிரி டாட்டூ குத்தியிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றை தனது இடுப்பில் குத்தியிருந்தார்.

actress Samantha Ruth Prabhu removed tattoo

எல்லாம் முடிஞ்சு போச்சு: நடிகை சமந்தா முதுகிலும், இடுப்பிலும் குத்தியிருந்த டாட்டூவை முற்றிலுமாக எடுத்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படத்தில் டாட்டூ காணாமல் இருப்பதை ரசிகர்கள் பார்த்து டாட்டூ அழிக்கப்பட்டுள்ளதை கன்ஃபார்ம் செய்துள்ளார்கள். காதல் கணவர் நாக சைதன்யாவின் பெயரை ஆசை ஆசையாய் பச்சை குத்தியிருந்த சமந்தா, விவாகரத்தான பிறகும் டாட்டூவை அழிக்காமல் இருந்தார். ஆனால், தற்போது அதை அழித்துவிட்டு இனி சேரவே வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X