என்ன பிரச்சனைன்னு தெரியலையே? சாகுந்தலம் மீண்டும் தள்ளி வைப்பு.. வருத்தத்தில் ரசிகர்கள் !
சென்னை : நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால், சமந்தாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
புராண கதை அம்சம் கொண்ட சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா, காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
மேலும், இதில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, யசோதா, சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் திரையரங்கில் வெளியான யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் வரும் பல சண்டை காட்சிகளில் சமந்தா டூப்பே இல்லாமல் நடித்திருந்தார்.

சாகுந்தலம்
காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது. டிரைலரில், புனிதமான காதலால் சாகுந்தலை அனுபவித்த துயரங்களையும், மாய சக்தியால் காதலை மறந்த காதலனை நினைத்து உருகுகிறாள் சாகுந்தலை. குணசேகரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தள்ளிவைப்பு
இப்படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் மீண்டும் தள்ளிவைக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

'சிட்டாடல்' வெப் சீரிஸ்
இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் குஷி படத்தில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும், ஆக்ஷன் தொடரான 'சிட்டாடல்' சீரிஸின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இதனை ராஜ் மற்றும் டிகே இயக்க, இத்தொடரில் சமந்தாவுடன் இணைந்து வருண் தவானும் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











