மாய சக்தியால் காதலை மறக்கலாம்..அவமானத்தை மறக்க முடியாது.. வெளியானது சமந்தாவின் சாகுந்தலம் டிரைலர்!

சென்னை : நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

புராணக்கதையான சாகுந்தலம் கதையைக்கொண்டு தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாகுந்தலம். இதில் காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமந்தா

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழில் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, யசோதா, சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் திரையரங்கில் வெளியான யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் வரும் பல சண்டை காட்சிகளில் சமந்தா டூப்பே இல்லாமல் நடித்திருந்தார்.

சாகுந்தலம்

சாகுந்தலம்

இந்நிலையில்,நடிகை சமந்தா நடித்துள்ள காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில், மேனகா, விஸ்வாமித்ரரின் காதலின் சாட்சியாக பிறக்கிறார் சகுந்தலா. அழகின் மொத்த உருவாக இருக்கும் சகுந்தலாவின் வாழ்க்கையில் புயல் சீறுகிறது. புனிதமான அவளின் காதலால் அவள் அனுபவித்த துயரங்களையும், மாய சக்தியால் காதலை மறந்த காதலனை நினைத்து உருகுகிறாள் சகுந்தலா.

5 மொழிகளில்

5 மொழிகளில்

அனுஷ்கா ரெட்டி நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாக உள்ளது.

மலையாளத்தில்

மலையாளத்தில்

நடிகை சமந்தா தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அந்தவகையில் 'கிங் ஆப் கோத' படத்தில் சமந்தா துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இத்திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X