“யசோதா“ படம் மரண மாஸ்.. தனியா கெத்து காட்டிய சமந்தா..மக்கள் கருத்து!
சென்னை : தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடித்துள்ள யசோதா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களே வந்திருக்கிறது.
வாடகை தாய் முறையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ளார் சமந்தா.
சமந்தா நடிப்பு பற்றியும் அவருடைய சண்டை காட்சிகள் பற்றியும் மக்கள் புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர்.

நடிகை சமந்தா
இயக்குனர் ஹரி ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் யசோதா. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி உள்ளது.

சூப்பரான படம்
யசோதா சூப்பரான படம், சமந்தா சூப்பராக நடிச்சு இருக்காங்க, இன்டர்வலுக்கு முன்னாடி படம் ஸ்லோவாகத்தான் போகுது ஆனால், இன்டர்வலுக்கு பிறகு சும்மா படம் தாறுமாறா இருக்கு படம் செமையாக இருக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம் என்றார்.

மரண மாஸா
ரசிகர்கள் படம் பார்க்க வரும் போது ஒரு தனி பீல் வரும் அந்த பீலை சமந்தா இந்த படத்தில் சரியாக கொடுத்து இருக்குறாங்க. செகண்ட் ஆபில் செம ட்விஸ்ட் ஒன்னு இருக்கு அது மரண மாஸா இருக்கு. சண்டை, பாட்டு, ஸ்கிரீன் ப்ளே என எல்லாமே சூப்பர். இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். யசோதா படம் ஒரு வித்தியாசமான கதையாக இருந்தது. மற்ற படத்தை பார்க்கும் போது இது ஒரு வித்தியாசமான கதையாக இருந்தது.

நடிப்பு தாறுமாறு
சமந்தாக்காகத்தான் இந்த படத்தை பார்க்க வந்தேன் சண்டை காட்சியில் சமந்தா சும்மா பின்னியெடுத்து இருக்காங்க, சண்டை காட்சியில் டூப்பே இல்லாமல் இவங்களே பண்ணி இருக்காங்க. இந்த படத்தை தூக்கி நிறுத்துவதே சமந்தாவின் நடிப்பு தான். படம் சூப்பர் படம் பார்த்துவிட்டு மனதிருப்தியோட போகிறேன் என்றார் சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர்.


Click it and Unblock the Notifications











