பணம் இல்லை.. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன்.. கலங்கிய சமந்தா!
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமந்தா, கையில் பணம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருக்கிறார். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, குடும்பத்தை நடத்தி வந்தார். யார் கண் பட்டதோ நாக சைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அக்டோபர் 2ம் தேதி தாங்கள் பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். கணவரை பிரிந்த பின் நடிகை சமந்தா சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா: மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா ஆறு மாதங்களுக்கு மேல் எழுந்து நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நேரத்தில் சமந்தா வாடகைத்தாய் கதை அம்சத்தைக்கொண்ட அதிரடி ஆக்ஷன் திரைப்படமான யசோதா படத்தில் நடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
சிட்டாடல் வெப் தொடர்: அதன்பின் விஜயதேவகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து கலெக்ஷனை அள்ளியது. இந்த படத்தைத் தொடர்ந்து பாலிவுட் ஹீரோ வருண் தவானும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பை முடித்துள்ளார். சிட்டாடல் என்பது ஆங்கில வெப் சீரிஸ். ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் நடித்துள்ளனர். இந்த பாத்திரங்களின் இந்திய பதிப்பில் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த இணையத் தொடருக்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
500 ரூபாய்க்கு வேலை: ஓடிடியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கடந்த காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக கூறியுள்ளார். அதில், நான் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது என் அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார்கள், நானும் நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தேன். 12 ஆம் வகுப்பு, மற்றும் கல்லூரி சென்றேன். ஆனால், நான் மேலும் படிக்க விரும்பியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக என் பெற்றோரால் என்னை படிக்க வைக்க முடியவில்லை.
ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பாடு: இதனால் கிடைத்த வேலைக்கு சென்றேன் திருமண விழாக்களில் வரவேற்பாளர் வேலைக்கு செல்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் தருவார்கள். மேலும், குடும்ப வறுமை காரணமாக ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிட்டேன். உங்கள் பாதை என்ன என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள், நீங்கள் எதை வேண்டுமானாலும் அதை கனவு காணுங்கள், அதை நீங்கள் அடைவீர்கள். அதில் நீங்கள் தோல்விடைந்தாலும், விடாமுயற்சியை கைவிட்டுவிடாதீர்கள், நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











