Samantha :தனிமையிலே இனிமை காணும் சமந்தா.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!
ஐதராபாத் :நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார். பான் இந்தியா ஸ்டாராகவும் மாறியுள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் இவருக்கு சொதப்பலாகவே அமைந்தது.
இதையடுத்து தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் வருண் தவானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தனிமையில் இனிமை காணும் சமந்தா : நடிகை சமந்தா தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வந்தவர். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சமந்தா, பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த தொடர் இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறது.
மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் வருண் தவானுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் பிரீமியர் ஷோ லண்டனில் நடைபெற்ற நிலையில், அதில் கருப்பு நிற உடையில் கலந்துக் கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வருண் தவானுடன் இவருடைய ஜோடி மிகவும் சிறப்பாக அமைந்தது. இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தாவின் யசோதா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதேபோல மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான சாகுந்தலம் படம் சொதப்பியது. தன்னுடைய உடல் நலத்தையும் யோசிக்காமல் சமந்தா இந்தப் படங்களின் பிரமோஷன்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். இதனிடையே தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தன்னுடைய நோய் பாதிப்பால் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் மிகவும் ஆக்டிவாக அடுததடுத்த வொர்க்அவுட் வீடியோக்கள், புகைப்படங்கள் என பதிவிட்டு வருகிறார். ரசிகர்களுக்கும் மிகவும் உந்துதலாக காணப்படுகிறார். தன்னுடைய நோய் பாதிப்பு நேரத்திலும் தன்னை மிகவும் ஆக்டிவாக வைத்துக் கொண்டார் சமந்தா. தொடர்ந்து அதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு, படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் குஷி சூட்டிங்கின்போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தப் புகைப்படங்களில் சமந்தா, தனிமையில் இருக்கும்படியாக காணப்படுகிறார். குடை பிடித்தபடியும், அனைவருடனும் இணைந்து விளையாடும்படியாகவும், தனிமையில் புத்தகம் படிக்கும்படியாகவும் காணப்படுகிறார். இந்தத் தனிமையை தான் விரும்புவதாகவும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











