நவம்பர் 4ல் வெளியாகும் சமந்தாவின் சாகுந்தலம்.. அடுத்த வெற்றிக்கு தயாராகும் சாம்!
சென்னை : காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாகுந்தலம்.
புராணக்கதையான சாகுந்தலத்தை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சகுந்தலையாக சமந்தா நடித்துள்ளார்.
இதனிடையே தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் சிறப்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

நடிகை சமந்தா
சமந்தா கடந்த 10 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் இருந்தாலும் அவரை எப்போதுமே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தி பேமிலி மேன் 2 சீரிசின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த சமந்தாவிற்கு இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாலிவுட்டிலும் அக்ஷய்யுடன் இவர் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
சமீபத்தில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய கதீஜா கேரக்டர் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் சமந்தா. தொடர்ந்து சாகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிறப்பான யசோதா டீசர்
இதில் யசோதா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே தற்போது சாகுந்தலம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாகவுள்ளது.

சாகுந்தலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டியணைத்தபடி போஸ்
இந்தப் போஸ்டரில் பிரம்மாண்டமான அரண்மனை பின்னணியில் உள்ள நிலையில் நாயகன் தேவ் மோகன் மற்றும் சமந்தா இருவரும் கட்டியணைத்தபடி காணப்படுகின்றனர். இந்தப் போஸ்டர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

புராணக்கதையை தழுவிய கதை
மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதீதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர்சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை குணசேகரன் இயக்கியுள்ள நிலையில், மணிசர்மா படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











