Shakunthalam movie: என்னது சாகுந்தலம் படம் இப்படியா.. வெளியான அப்டேட்!

சென்னை : நடிகை சமந்தா நடிப்பில் வரும் 14ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது சாகுந்தலம்.

இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

நடிகை சமந்தாவின் யசோதா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தாவின் சாகுந்தலம் : நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாவிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சமந்தா. பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 படத்தை கொடுத்த டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் அடுத்த வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக சமந்தாவின் சாகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது.

Actress Samanthas Shakunthalam movie premier show happened and the movie gets mixed comments

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், கேரளா, ஆந்திரா, மும்பை என அடுத்தடுத்த இடங்களில் தன்னுடைய ப்ரமோஷனை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் சமந்தா. ஐதராபாத்தில் அவரைக் காண குவிந்த கூட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. பிரமிப்பையும் ஏற்படுத்தியது. ரசிகர்கள் சமந்தாவை கொண்டாடினர். இந்தப் படத்திற்கு மிகச் சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக இந்தப் படத்தை தனியாக பார்த்த சமந்தா, படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் இயக்குநருக்கு பாராட்டுக்களை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் படம் ரிலீசாவதற்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் பிரீமியர் ஷோ நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ள குணசேகர், இதுபோன்ற முயற்சிகளை விட்டுவிட்டு, கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தினால் நல்லது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படம் 5ற்கு 2 மார்க் மட்டுமே வாங்கியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் ஆஃப்பிலாவது ஒரு சில காட்சிகள் பார்க்கும்படி அமைந்துள்ளதாகவும் இரண்டாவது பாதியில் பயங்கர சொதப்பல் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்ஹாவின் நடிப்பு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் திரைக்கதை மிகவும் மோசமாக அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளன.

Actress Samanthas Shakunthalam movie premier show happened and the movie gets mixed comments

சமந்தாவின் நடிப்பில் சாகுந்தலம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் சமந்தா ரொம்பவே பிசி. அவரது நோய் பாதிப்பிலிருந்து அவர் ஓரளவிற்கு மீண்டுள்ள நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பிரச்சினைகள், சவால்கள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டுவரும் சமந்தாவிற்கு வெற்றித் தோல்விகள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X