'இங்கதான் நிற்கறாங்க..' தனது உதவியாளருக்காக ஓடோடி வந்த நடிகை சமந்தா...கண்டபடி பாராட்டும் டோலிவுட்

By

சென்னை: தனது உதவியாளருக்காக நடிகை சமந்தா செய்த செயலை டோலிவுட்டில் பாராட்டி வருகின்றனர்.

தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, இந்தப் படத்திn தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பிறகு, பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி உட்பட பல படங்களில் நடித்தார்.

திருமணத்துக்குப்பின்

திருமணத்துக்குப்பின்

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அவர், நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். நாக சைதன்யா பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவின் மகன். சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா, கடைசியாக 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். அடுத்து, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ரெஸ்டாரென்ட்

ரெஸ்டாரென்ட்

இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வத் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, அவர் தெலுங்கு கோடீஸ்வரி நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தனது நீண்ட நாள் உதவியாளர் ஆரம்பித்திருக்கும் ரெஸ்டாரென்டை நடிகை சமந்தா தொடங்கி வைத்துள்ளார். இது டோலிவுட்டில் வரவேற்பை பெற்றுள்ளது.

ரிப்பன் வெட்டி

ரிப்பன் வெட்டி

தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தாவின் உதவியாளராக இருப்பவர் ஆர்யன். கடந்த 11 வருடமாக அவருக்கு உதவியாளராக இருக்கிறார். இவர் தற்போது ஐதராபாத்தில் ரெஸ்டாரென்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்துள்ளார் நடிகை சமந்தா. பின்னர், அங்கு சில மணி நேரம் இருந்தார்.

திறமையானவர்

திறமையானவர்

அப்போது செய்தியாளர்களிடம் சமந்தா கூறும்போது, 'எனக்கு உதவியாளராக கடந்த 11 வருடங்களாக இருக்கிறார் ஆர்யன். திறமையானவர். என் கஷ்ட, நஷ்டங்களில் உடன் இருந்தவர். அவர் அடுத்தக்கட்டமாக இந்த ரெஸ்டாரென்டை தொடங்கி இருக்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக இங்கு வந்தேன் என்று தெரிவித்தார். சமந்தாவின், இந்தச் செயலை தெலுங்கு திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X