நாளை வெளியாகும் சமந்தாவின் யசோதா ட்ரெயிலர்.. தமிழில் சூர்யா வெளியிடறாரு!
சென்னை : ஹீரோக்களுடன் டூயட் பாடிவந்த சமந்தா தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமந்தாவின் யசோதா படம் அடுத்தமாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இதனிடையே நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். பாலிவுட்டில் இவரது தி பேமிலி மேன் 2 தொடர் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் சமந்தாவிற்கு பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து இவர் தற்போது அக்ஷய் குமாருடன் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

சமந்தாவின் கதீஜா கேரக்டர்
தமிழில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் படத்தில் சமந்தாவின் கதீஜா கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அதற்கு முக்கியமான காரணமாக சமந்தா அமைந்தார். படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது.

கர்ப்பிணி பெண்ணாக சமந்தா
இதனிடையே சமந்தா நடிப்பில் அடுத்ததாக யசோதா படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கர்ப்பிணி பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுதது சமந்தா நடித்து வருகிறார். இந்தப் படம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

நாளை ட்ரெயிலர் வெளியீடு
முன்னதாக யசோதா படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனிடையே நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர்கள் ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இயக்கியுள்ளனர்.

த்ரில்லர் பாணி கதை
கர்ப்பிணியான சமந்தாவிற்கு ஏற்படும் அனுபவங்களை த்ரில்லர் பாணியில் இயக்குநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்திற்காக சமந்தா மிகவும் மெனக்கெட்டு நடித்துள்ளதாக முன்னதாக இயக்குநர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்த் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

5 மொழிகளில் ட்ரெயிலர் வெளியீடு
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில், நாளைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலரை சூர்யா தமிழில் வெளியிடவுள்ளார். இதேபோல தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, இந்தியில் வருண் தவான், மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

5 மொழிகள்.. 5 ஹீரோக்கள்
சமந்தா ஏற்கனவே பான் இந்தியா ஸ்டாராக பட்டையை கிளப்பி வரும் சூழலில் அவரது படத்தின் ட்ரெயிலரை 5 மொழிகளில் 5 முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டீசர் மிகவும் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











