ரசிகர்களின் காத்திருப்பு.. இன்னும் சில தினங்களில் சமந்தா படத்தின் டீசர்!
ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் சிறந்த நடிகையாக மாறியுள்ளார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இவரது யசோதா, குஷி போன்ற படங்கள் சூட்டிங் முடிந்து அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் அக்ஷய் குமாருடன் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்றது வைரலானது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை கைப்பற்றியுள்ளார். பாலிவுட்டில் இவர் நடித்த தி பேமிலி மேன் 2 சீரிஸ் இவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.

பாலிவுட்டில் சமந்தா
சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் பாலிவுட்டில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை அதிகமாக கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சமந்தாவை அக்ஷய் குமார் கையில் தூக்கி வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல இருவரும் புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இணைந்து ஆடியதும் வைரலானது.

அடுத்தடுத்த படங்கள்
தெலுங்கில் யசோதா மற்றும் குஷி படங்களில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இதில் யசோதா படம் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் தமிழில் அவரது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது கதீஜா கேரக்டர் சிறப்பு கவனம் பெற்றது.

யசோதா படத்தின் டீசர்
இந்நிலையில் அடுத்ததாக சமந்தாவின் யசோதா படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 9ம் தேதி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் விலகல்?
தன்னுடைய திருமணம், விவாகரத்து முடிவு எதுவும் தன்னுடைய கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொண்டார் சமந்தா. தமிழிலும் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவந்த சமந்தா சமீப காலங்களில் பதிவுகள் அதிகமாக போடாமல் உள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











