Samantha: புது லுக்கில் சமந்தா.. புதிய வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

சமீபத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்த குஷி படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

Actress Samantha spotted in Mumbai airport with new look

இதனிடையே, தன்னுடைய நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுக்க வேண்டி, சமந்தா தற்போது இடைவெளி எடுத்துள்ளார்.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி படம் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. சமந்தாவிற்கும் அதிகமான வரவேற்பை குஷி படம் பெற்றுக் கொடுத்தது. முன்னதாக வெளியான யசோதா உள்ளிட்ட படங்களும் சமந்தாவிற்கு சிறப்பாக அமைந்தது.

அரியவகை நோய் பாதிப்பு: இதனிடையே சமந்தாவிற்கு ஏற்பட்டுள்ள மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக அவர் 6 மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். இதனால் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட பதிவுகளை பார்த்த ஏராளமான ரசிகர்கள் லைக்கும் கொடுத்தனர்.

சமந்தா புதிய லுக்: இதனிடையே தற்போது மும்பை விமானநிலையத்தை நடிகை சமந்தா உற்சாகத்துடன் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. மஞ்சள் நிற குர்தா அணிந்து ஸ்மார்ட்டாக நடந்துவந்த சமந்தா, தன்னுடைய பேச முயன்ற ரசிகர்களிடம் ஸ்மைல் செய்துவிட்டு தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். அவரை ரசிகர்கள் வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர். சமந்தா அணிந்திருந்த ஸ்டைலிஷ்ஷான கூலர்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்த படங்களில் சமந்தா: நாக சைத்தன்யாவுடனான பிரிவிற்கு பிறகு தன்னுடைய கேரியரில் மிகச்சிறப்பான கவனத்தை செலுத்தி வந்தார் சமந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என அடுததடுத்த படங்களில் நடித்துவந்த சமந்தா வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில்தான் அவருக்கு அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவராக நடைபோட்டுவரும் சமந்தாவிற்கு இந்த பாதிப்பு எந்த சறுக்கலையும் கொடுத்துவிடவில்லை.

இடைவெளி விட்ட சமந்தா: மாறாக இந்த பாதிப்பிற்காக சிகிச்சை எடுத்துவந்த சமந்தா, தன்னுடைய கமிட்மெண்ட்களை விரைவாக முடித்துக் கொடுத்துவிட்டு, சினிமாவில் இருந்து தற்போது 6 மாத இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் இந்த நோய்க்கான சிகிச்சையையும் எடுத்துக் கொண்டு வருகிறார். ஆறு மாத காலங்கள் நிறைவடைந்தவுடன் மீண்டும் பழைய உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் சமந்தா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X