வெள்ளை உடையில் தேவதை போல் வந்த சமந்தா... சாகுந்தலம் வெற்றி பெற கோவிலில் வழிபாடு!
ஹைதராபாத் : நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்து சாகுந்தலம் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை தொடங்கினார்.
புராணக்கதையான சாகுந்தலம் கதையைக்கொண்டு தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாகுந்தலம். இந்த காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
மேலும் இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமந்தாவின் சாகுந்தலம்
ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் சாகுந்தலம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் நம்பவர் மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை தற்போது ஏப்ரல் 14ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

காவியக் காதல்
காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அந்த டிரைலரில், மேனகா, விஸ்வாமித்ரரின் காதலின் சாட்சியாக பிறக்கிறார் சகுந்தலா. அழகின் மொத்த உருவாக இருக்கும் சகுந்தலாவின் வாழ்க்கையில் புயல் சீறுகிறது. புனிதமான அவளின் காதலால் அவள் அனுபவித்த துயரங்களையும், மாய சக்தியால் காதலை மறந்த காதலனை நினைத்து உருகுகிறாள் சகுந்தலா. இப்படத்திதில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

கோவிலில் சாமி தரிசனம்
இந்நிலையில், நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்து சாகுந்தலம் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை தொடங்கினார். வெள்ளை உடையில் அழகாக இருந்த சமந்தா, கையில் சாகுந்தலம் என எழுதப்பட்டிருந்த தட்டில், பூ, புடவை, வளையளுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அவருடன் படத்தின் நாயகன் தேவ் மோகனும், படக்குழுவினரும் உடன் இருந்தனர்.

அனைவரின் ஆசிர்வாதமும் தேவை
இந்த புகைப்படத்தை நடிகர் தேவ் மோகன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "புதிய தொடக்கம் சாகுந்தலம் ப்ரோமோஷனை மகிழ்ச்சியுடன் கோவில் இருந்து தொடங்கி உள்ளோம். அனைவரின் ஆதரவுக்காகவும், ஆசீர்வாதங்களையும் காத்திருக்கிறோம் என்று எழுதி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











