மயோசிடிஸ் நோய்.. தனது பூனையுடன் 'ரெட் லைட் தெரபி ' எடுக்கும் சமந்தா!
சென்னை: மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் சாகுந்தலம் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்டார். சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்த முடித்து ஓய்வு எடுத்து வரும் சமந்தா லைட் தெரபி எடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா, சினிமா உலகில் இவ்வளவு உயரம் தொட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இத்தனைக்கும் அவருக்கு எந்த சினிமா பின்புலமும் இல்லை. பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை பெரியது. பல வதந்திகள், விமர்சனத்திற்கு உள்ளாகி மீண்டு வந்த பெண் போராளி என்று கூட சமந்தாவை சொல்லலாம்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில வருடங்களில் அவரை பிரிந்தார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆண் ஆதிக்க சிந்தனையுள்ள பலரும் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், அது எல்லாவற்றையும் புன்னகையிடன் சமந்தா கடந்தார். விவாகரத்துக்கு இழப்பீடு கூட வேண்டாம் என சொல்லி தன்னம்பிக்கையுடன் தற்போது நடித்து வருகிறார்.
சிட்டாடல்: ஒருபக்கம், தோல் நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதற்காக சிகிச்சைகளையும் பெற்று வருகிறார். சமந்தாவால், ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பேமிலி மேன் எடுத்த இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதில் சமந்தாவுடன் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பல வருடங்களாக நடந்து வருகிறது.
லைட் தெரப்பி: தற்போது சமந்தா சிகிச்சை எடுத்து வரும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். லைட் தெரபி சிகிச்சை எடுத்திருக்கிறார். இந்த தெரப்பி சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க கூடியது. இதனால் சமந்தா தான் வளர்க்கும் பூனையுடன் சேர்ந்து இந்த தெரபியை எடுத்திருக்கிறார். மேலும், இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ரெட் லைட் தெரப்பி டேட் என்று பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











