56 வயதான முரட்டு சிங்கிளுக்கு ஜோடியாகும் சமந்தா.. என்ன படத்தில் தெரியுமா ?
சென்னை : 56 வயதான முரட்டு சிங்கிள் நடிகருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை முன்னணி நட்சத்திரமாகவும் பெரிதும் மதிக்கப்படும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் சமந்தா.
வெளிமாநில நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்த காலகட்டத்தில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்கள் முன்னணிக் கதாநாயகிகளாக நீடிப்பது அரிதாக இருந்தது. அந்த காலகட்டத்தில் த்ரிஷாவுக்குப் பிறகு சென்னைப் பெண்ணாகக் களமிறங்கி சாதித்தவர் சமந்தா.

சமந்தாவுக்கு நல்ல தொடக்கம்
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தாலும், இந்த திரைப்படம் காதலர்களுக்கும்...காதலித்து பிரிந்தவர்களுக்கும் மிகவும் பிடித்தமான திரைப்படமாக அமைந்து சமந்தாவுக்கு ஒரு பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'யே மாயா சேஸவே'திரைப்படத்தில் நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் அறிமுகமாகி, முதல் படத்திலேயே இரண்டு மாநிலங்களின் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை இரண்டு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இரண்டு மொழிகளிலும் பேசத் தெரியும் என்பதாலும் இரண்டு மொழி ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார்.

இருவரும் பிரிந்தனர்
முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் கோவாவில் இவர்களது திருமணம் தடபுடலாக நடந்தது. பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவருக்கும் பிடித்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் கருத்துவேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர்.

சமந்தா படு பிஸி
திருமணத்திற்கு பிறகும் ஹிட் படங்களில் நடித்த சமந்தா, விவாகரத்துக்குப் பிறகு, அதீத கவர்ச்சியுடன் புஷ்பா திரைப்படத்தில், ஐட்டம் பாடலான ஊ சொல்றியா மாமா.. பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த திரை உலகையும் 'ஊம்' சொல்ல வைத்து விட்டார். தற்போது ஹாலிவுட், பாலிவுட், கோலிட், விளம்பர படம் என நிற்கக்கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக இருக்கிறார்.

முரட்டு சிங்கிள்
இந்நிலையில், நடிகை சமந்தா 56 வயதாகியும் முரட்டு சிங்கிளாவே இருக்கும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அனீஸ் பாஸ்மே என்பவர் இயக்குகிறார். சமந்தா மட்டுமின்றி இப்படத்தில் நடிகை தமன்னாவும் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











