திகில் திரைப்படமான ‘யூ டர்ன்’ இந்தியில் ரீமேக்காகிறது… ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை : 2018ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் தான் யூ டர்ன். இத்திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக்காக உள்ளது.
இத்திரைப்படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற படம்
2016ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிப்பெற்றத் திரைப்படம் தான் யூ டர்ன். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பவன் குமார் இயக்கி இருந்தார். சமந்தா மற்றும் ஆதி லீட் ரோலில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். திகில் மற்றும் திரில்லர் படமான இப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது.

இந்தியின் ரீமேக்
இந்நிலையில், யூ டர்ன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், இந்தியில் சமந்தாவின் கதாபாத்திரத்தில் நடிகை அலயாவை நடிக்க வைக்க ஆலோசித்து வருகின்றனர். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ரோலில்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் 80சதவீத படிப்பிடிப்பு முடிந்துவிட்டது படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராஜி கதாபாத்திரத்தில்
சமந்தாவின் நடிப்பில் வெளியான பேமிலி மேன் 2 வெப் தொடர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரில், ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். தமிழகத்தில் பேமிலி மேன் 2க்கு எதிர்ப்பு கிளம்பினாலும் இத்தொடர் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











